புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு புதன்கிழமை (10.07.2013) முடிவடைகிறது. ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். 
தேமுதிவில் இருந்து சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), தமிழழகன் (திட்டக்குடி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண் பாண்டியன் (பேராவூரணி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி (சேந்தமங்கலம்), மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகிய 7 உறுப்பினர்கள், முதல்
அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதன்பிற தேமுதிகவில் இருந்து பிரிந்து அதிருப்பு எம்எல்ஏக்களாகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரிக்குமாறு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விஜயகாந்த் கடிதம் அனுப்பினார்.
ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்காமல் அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு 7 பேரும் வாக்களித்தனர்.
இதற்கு விளக்கம் கேட்டு ஜூன் 28-ம் தேதி அதிருப்தி எம்.எம்.ஏ.க்கள் 7 பேருக்கும் விஜயகாந்த் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸில், தேமுதிகவின் வேட்பாளருக்கு வாக்களிக்காததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதாகும், கட்சியிலிருந்து நிரந்தரமாக ஏன் நீக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை ஜூலை 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தேமுதிக தலைமை கொடுத்த கெடு புதன்கிழமை (10.07.2013) முடிவடைகிறது. 
ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டு விளக்கம் கேட்பதில் நியாயம் இல்லை என்பதால் விளக்கம் அளிக்கப் போவதில்லை என 7 பேரும் முடிவு செய்துள்ளனர்.

ad

ad