புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013


முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக்
வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும்
அரசியலில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமிழ் பேசும் மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வட மாகாணத்துக்குரிய முதலமைச்சர் வேட்பாளருக்கான அனைத்து தகுதிகளும் த. தே. கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு இருந்தும் அரசியலில் ஈடுபடாத முன்னாள் நீதியரசரை தெரிவு செய்துள்ளமை தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாகும்.

அத்துடன் நீதித்துறையில் புகழ்பெற்ற விக்னேஸ்வரன் அரசியல் ஒரு சாக்கடை என கூறிக்கொண்டு தனது சமூகத்தை மறந்து மக்களுக்கான சேவையிலிருந்து ஒதுங்கும் முடிவை மேற்கொள்ளாது தேர்தல் வேட்பாளராவதை அவர் ஏற்றுக்கொண்டமை மிகச்சிறந்த எடுக்காட்டாகும்.

இதன் மூலம் புத்திஜீவிகளின் அரசியல் பிரவேசம் மூலம் மக்களுக்கான அரசியல் முன்னெடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. இத்தகைய ஒருவர் வட மாகாண சபை முதலமைச்சராக வருவதன் மூலம் அங்கு வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பது முஸ்லிம் மக்கள் கட்சியின் எதிர்பார்ப்பாகும்.

ad

ad