புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2013

,

வட மாகாணசபை தேர்தல்! தயா மாஸ்டருக்கு மட்டும் வாய்ப்பு
வடக்கு மாகாணசபையில் போட்டியிட தயா மாஸ்டருக்கு மட்டுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று மாகாண சபைகளுக்கும், வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு மாகாணசபைத் தேர்தலில், போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான முதலாவது கட்ட நேர்முகத் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சுமார் 40 பேர் வரை நேர்காணல் செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக, ஸ்ரீலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட நேர்முகத் தேர்வில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பேச்சாளர் தயா மாஸ்டரும் பங்கேற்றிருந்தார்.
இந்தநிலையில், அண்மையில் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, கேபி போன்றோரும் ஆளும்கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன
எனினும், இந்தத் தேர்தலில் தயா மாஸ்டருக்கு மட்டுமே, போட்டியிட வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.

ad

ad