புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2013

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு :
 குற்றவாளிகளை நெருங்கியது சிறப்பு புலனாய்வுக்குழு 
பாரதீய ஜனதா பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.  சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. நரேந்திர பால்சிங், கூடுதல்
டி.ஜி.பி. கரன் சின்கா ஆகியோர் தலைமையில் ஐ.ஜி மஞ்சுநாதா, எஸ்.பி அன்பு, மற்றும் போலீசார் சேலத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இவர்கள் சேலம் அருகில் உள்ள இரும்பாலையில் இருக்கும் ஆய்வாளர் மாளிகையில் தங்கி தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இவர்கள் சந்தேகப்படுபவர்களை சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்து அனுப்பி வைத்து வருகிறார்கள். இந்த விசாரணை ஐ.ஜி. மஞ்சுநாதா, எஸ்.பி. அன்பு ஆகியோர் முன் நடக்கிறது. இவர்கள் இதுவரை 75–க்கும் மேற்பட்ட ரவுடிகள், கொலை வழக்குகளில் சிறைக்கு சென்று விடுதலை ஆனவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இன்று 4–வது நாளாக தீவிர விசாரணை நடந்தது. ஆடிட்டர் ரமேஷ் கொலையை நேரில் பார்த்த காவலாளி ஜெயராமன் (வயது 70) சேலம் சி.பி.சி.ஐ,.டி. அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சந்தேகப்படும்படி அழைத்து வருபவர்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அவர் தரும் தகவல்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு பிரிவு. டி.ஜி.பி. நரேந்திரபால்சிங் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா ஆகியோர் சென்னை, சேலம், கோவை உள்பட பல ஊர்களுக்கு சென்று நேரில் விசாரித்து விசாரணையை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
ஆடிட்டர் ரமேஷ் கொலையில் 3 அல்லது 4 பேர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
கொலையாளிகள் 19–ம் தேதி இரவு காரில் சேலம் வந்துள்ளனர். பின்னர் இவர்கள் காரை வேறு எங்கோ ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு கொலை நடந்த இடமான மரவனேரி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பிறகு 3 பேர் மட்டும் ஆடிட்டர் ரமேசை பின் தொடர்ந்து சென்று அவரை தாக்கி கொன்று ள்ளனர்.
பிறகு அவவர்கள் கண்ணிமைக்கும் நேரில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி கார் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். பிறகு அவர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த கார் வந்து சென்றதற்கான கார் டயர் அடையாளம், மற்றும் மோட்டார் சைக்கிள் வந்து சென்றதற்கான அடையாளங்களை வைத்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் யாருடையது? இந்த வாகனங்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டு உள்ளது ? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் நெருங்கி விட்டனர். இன்னும் சில நாட்களில் குற்றவாளிகளை கைது செய்து விடலாம் என்ற நம்பிக்கை அதிகாரிகளுக்கு வந்து விட்டது.

ad

ad