புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

தகாத உறவை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி, கல்கமுவ பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை கிராம மக்கள் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது.
குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மொன்னக்குளம் அல்- அஸ்னா ஜூம்மா பள்ளிவாசலில் வைத்து இந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. இதன் போது தலையில் காயமடைந்த நிலையில் அந்த பெண்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் தமிழ் இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் இதனை குடும்பத்தினர் எதிர்த்து வருவதாகவும் காதலரை பார்த்து விட்டு, திரும்பி கொண்டிருந்த போது தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று தலைமுடியை துண்டித்துடன் கைகளை கட்டி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண்கள் கைதுசெய்யப்பட்டு, இன்று கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை கடுமையாக எச்சரித்த நீதவான் ஜயதிலக்க தென்னகோன், கடும் நிபந்தனைகளை விதித்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
40 வயதான இந்த பெண், இளைஞர் ஒருவருடன் தகாத உறவுகளை வைத்திருந்ததாகவும் பல முறை எச்சரித்தும் அவர் கேட்காததால், இந்த தண்டனை வழங்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் ஷரியா சட்டம் இலங்கையில் அடிப்படைச் சடத்தில் உள்ளக்கப்படவில்லை என்பதால், பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறான செயல் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ad

ad