புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2013

,

மனோ கணேசன், அசாத் சாலி கண்டியில் போட்டி! 12ம் திகதி இறுதி தீர்மானம்!- மனோ கணேசன்
எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் கண்டியில் போட்டியிட முன்வந்துள்ளனர்.
மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரை மனோ கணேசன் தனக்கென பாரிய ஆதரவுத் தளம் ஒன்றை வைத்துள்ளதுடன், தனியாகப் போட்டியிட்டு இரண்டு மாகாண சபை உறுப்பினர்களைப் பெறும் அளவுக்கு வாக்கு வங்கியையும் கொண்டுள்ளார்.
மறுபுறத்தில் ஆசாத் சாலி, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டு பாரிய வாக்குகளை பெற்று வெற்றிபெறக் கூடிய செல்வாக்கைக் கொண்டுள்ளார்.
எனினும் இவர்கள் அவ்வாறு தனித்துப் போட்டியிட்டால் ஐக்கிய தேசிய கட்சி வசம் உள்ள தமிழ், முஸ்விம் வாக்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். அது அரசுக்கு சாதகமாக அமைந்து விடும்.
இதனைக் கருத்திற் கொண்டே இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ளதாக தெரியவருகிறது.
மாகாணசபை தேர்தல்கள்  தொடர்பான பல்வேறு சாத்தியங்கள் பற்றி 12ம் திகதி அரசியல்குழுவில் இறுதி தீர்மானம் - ஜமமு தலைவர் மனோ  கணேசன்   
மத்திய, வட-மேல், வட மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் கூடும் கட்சியின் அரசியல் குழு இறுதி முடிவு எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக கண்டி, நுவரெலியா, மாத்தளை, புத்தளம் மாவட்டங்களில் போட்டியிடுவது பற்றி ஐக்கிய தேசிய கட்சி, நவசமசமாஜ கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி, நவ சிஹல உறுமய மற்றும் சில மலையக கட்சிகளிடமிருந்து அழைப்புகள்  கிடைத்துள்ளன.
இந்த அனைத்து சாத்தியங்களும்  தற்சமயம் ஆராயப்பட்டு வருகின்றன.
அதேவேளை வட மாகாணசபை தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவுள்ள நிலைப்பாடு  தொடர்பிலும் நாம் அக்கறை  கொண்டுள்ளோம்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நமது அரசியல்குழு எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை  ஆராய்ந்து முடிவுகள் எடுக்கும்.        

ad

ad