புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2013

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்!: த.தே.கூட்டமைப்பு தலைவர் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது தொடர்பான தகவலை சற்று முன் சிங்கள ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது. இதில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டன.
மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் நீக்கப்படாத நிலையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பு தீவிரமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் அவ்வாறான நிலையில் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக வடமாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படுவதைத் தடுப்பதாயின் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களை சமாளிக்கும் பொருட்டு, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவு
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் போட்டியிட உள்ளார்.
இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உறுதி செய்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதில் கூட்டமைப்பு கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலைமை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
எனினும், தற்போது ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்  முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தேர்தல் வியூகம் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு குறித்து ஊடகங்களுக்கு அறிவித்த போது சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசரை நியமிக்க வேண்டும் என கட்சியினர் தெரிவித்து வந்தனர். 

ad

ad