புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013




              காதலும் பரபரப்பு... அந்த காதல் தந்த பரிசான மரணமும் பரபரப்பு... மரணத்தின் பின் விளைந்த சந்தேகத் தால் "அடக்கமாக' வேண்டிய இறுதி கட்டத்திலும் பரபரப்பு... ஆக ஒட்டு மொத்த தமிழகத்தையே அடுத்தது என்ன என்ற கேள்விக்குரியவர்களாக்கி கடந்த 11 நாட்களாய் பதை, பதைக்க வைத்துவிட்டது இளவரனின் மரண மும், உடல் அடக்கமும்.

இளவரசனின் காதல் மனைவி யான திவ்யா, தந்தை நாகராஜின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதது போல, இளவரசன் இறுதி சடங்கிலும் பங்கேற்க முடியாமல் போய் விட்டதுதான் காதல் கொடுத்த உச்சகட்ட பரிசு.

கடந்த 4-ம் தேதியிலிருந்து 10 நாட்களாய் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனைக்காக மீண்டும் 13-ந்தேதி தொட்டனர் டாக்டர்கள். கோர்ட் உத்தரவுப்படி வந்திருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பரத்வாஜ், மெல்லோடாமின், சுடிர்குமார் குப்தா ஆகியோரைக் கொண்ட டீம் 4 மணி நேரம் மறு ஆய்வை செய்து முடித்தது.

வழக்கின் ஐ.ஓ.வான சம்பத், தர்மபுரி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தண்டர்சீஃப் உடனிருந்தனர். எய்ம்ஸ் மருத்துவர் குழு அப்போது தண்டர் சீஃப்பிடம், "ஆல் ரெடி டன்... வெரி வெல்... குட்வொர்க்' என்று பாராட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டது. முன்னதாக எய்ம்ஸ் டாக்டர்கள் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டனர்.

"பி.எம். முடிச்சாச்சு. இப்பவே மணி ஏழாகப் போவுது. இருட்டறதுக்குள்ளே கொண்டுபோயி ஆகற வேலை யைப் பாருங்க... பத்து நாளா தூக்கமே இல்லாம கிடக்கி றோம்' என்று மார்ச்சுவரி பந்தோபஸ்து டூட்டியில் இருந்த போலீசார் சத்தமாக சொல்ல ஏற்பாடுகள் வேகமெடுத் தன. இளவரசன் உடலை வேனில் ஏற்றுகிற கடைசி நிமிடத்தில் "எங்க வக்கீல்கள் மற்றும் சொந்தக்காரங்களை ரிலீஸ் பண்ணாத்தான் உடம்பை எடுத்துக்கிட்டுப் போவோம். இல்லேன்னா முடியாது' என்று இளவரசன் அப்பா இளங்கோவன் உறுதி யான குரலில் சொன்னார்.

அவரை அருகில் அழைத்த போலீசார், "பாடியை வாங்க மாட்டேன்னு கையால எழுதிக் கொடு. நாங்க அதை கோர்ட்ல குடுத்துடறோம். பாடியை அப்படியே திருப்பி மார்ச்சுவரிக்கு அனுப்பிடறோம்' என்று மிரட்டலாய் பதில் சொல்ல "அதெல்லாம் ஒண்ணுமில்லே... நீங்க குடுங்க. நாங்க எடுத்துக்கிட்டுப் போயிடறோம்' என்று பதில் தந்து உடனிருந்தவர்கள் டென்ஷனைக் குறைத்தனர். இதைத் தொடர்ந்து பலத்த கோஷங்கள், கூக்குரல்கள் சுற்றுப்புற ஏரியாவை அதிர வைக்க இளவரசனின் உடல் வேனில் ஏற்றப்பட்டு நத்தம் காலனிக்கு கொண்டு செல்லப்பட் டது. பத்து நாட்களாக இரவும், பகலும் மார்ச்சுவரி வாசலிலேயே கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்த இளவரசனின் பெற்றோர் அந்த வேனிலேயே உடன் ஏறிக் கொள்ள வேன் பயணப்பட்டது. காதல் இளவரசன் என்ற வாசகத்துடன் கூடிய பனியனில் இளவரசன் முகம் தெரிய சுமார் 50 பனியன் இளைஞர்கள், உடல் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸை சுற்றி பாதுகாப்பு அரண் போல நின்று கொண்டனர்.

எங்கு திரும்பினாலும் கறுப்புக்கொடிகள் காற்றி லாட... வீடுகளில் சோகம் அப்பிக் கொண்டிருந்ததை காண முடிந்தது. இளவரசனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில்தான் மயானம் இருந்ததால் ஊர்வலப் பாதையில் பெரிய அசம்பாவிதம் நடந்து விடாது என்று போலீசார் நம்பிக்கையில் இருந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. ஆனால் ஒருநாள் முழுவதும் இளவரசன் உடல் நத்தம் காலனியில் வைக்கப்பட்டிருந்த சமயமும் அதற்கடுத்த நாளான 14-ந்தேதி பிற்பகல் 3 மணி வரையிலும் போலீ சார் ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் குறையாமலேயே காணப்பட்டனர்.

"...ஏம்ப்பா இளங்கோ... 30 சென்ட் எடத்தை வாங்கி யிருக்கியாமே எதுக்காம், இந்த நேரத்துல போயி...?' என்று உறவினர் ஒருவர் கேட்க, "தென்கிழக்கு பக்கமா எடம் கெடைச்சது புள்ளக்கி சமாதி கட்டணும்கறதுக்காக வாங்கியிருக் கேன்' என்று அந்த துக்க நேரத்திலும் விளக்கம் கொடுத்தார் இளங்கோவன். அருகிலிருந்த பெண்கள், "தலமாட்டுல அந்தப் பொண்ணோட (திவ்யா) போட்டோவை மாட்டித் தொங்க விட்ருப்பா... அவனுக்கு திவ்யான்னா ரொம்ப புடிக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொல்.திருமாவை போலீசார் எல் லையிலேயே பிடித்து திருப்பி அனுப்பி விட்டார்கள் என்ற தகவல் வேகமாக பரவ இரவு 10 மணியளவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டது.

பெங்களூருவில் இருந்து கிருஷ்ண கிரிக்கு வந்த திருமா, தமிழ்நாடு ஓட்ட லில் தங்கிவிட்டு அங்கிருந்து அப்படியே பயணப்பட்டு நத்தம் காலனி வருவ தாகத்தான் திட்டம் இருந்துள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சியர் விவே கானந்தன் அதற்கு சம்மதிக்கவில்லை. "உங்களை மாதிரி நிறைய லீடர்ஸ் ஊர்வலத்துல கலந்துக்கறதுக்கு லெட்டர் கொடுத்திருக்காங்க. ப்ளீஸ்... புரிஞ்சுக்கங்க' என்று நேர்த்தியாய் பதிலளித்து திருமாவை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.

"தர்மபுரிக்கு நான் தனியாக வேணும் னாலும் போய்க்கறேன். அனுமதி கொடுங்கன்னு மனு கொடுத்திருந்தேன். அதை நிராகரிச்சுருக்காங்க. இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக காட்ற எல்லா வேலையையும் போலீஸ் பண்ணுது' என்று தொடர்ந்து கொதி நிலையில் இருந்தார் திருமா.


இதேபோன்று இளவரசன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகாமி... ஆனால் கடைசி நிமிடத்தில் தன் ப்ளானை மாற்றிக் கொண்டார் அவர். வி.சி. நிர் வாகியான முத்துக்குமரனின் பைக்கில் கிருஷ்ணகிரி டூ சேலம் பின் மாரவாடி கிராமம் மார்க்கத்தில் நத்தம் காலனிக் குள் எளிதாக நுழைந்து அஞ்சலி செலுத்தினார் சிவகாமி. இதுபற்றி தகவல் கிடைத் ததும் டென்ஷனான எஸ்.பி.அஸ்ராகார்க் சிவகாமியைத் தேடத் தொடங்கிவிட்டார். ஆனால் ஊர்ப்பொதுமக்கள் எஸ்.பி.யிடம் கெஞ்சிக் கூத்தாடி "அந்தம்மாவை மட்டும் ஊருக்குள்ளே விட்ருப்பா. அரெஸ்ட்லாம் பண்ணிடாதே' என்று வேண்டுகோள் வைத்தனர். "நான் 144 சம்மன் கொடுக்கத்தான் அவங்களை தேடினேன், அரெஸ்ட் பண்றதுக்காக இல்லே' என்று சொல்லிவிட்டு சிவகாமியை போனில் பிடித்து சூழ் நிலையை விளக்கினார்.

இதையடுத்து சிவகாமி நேராக அவரே போலீஸ் வண்டியில் போய் ஏறிக் கொள்ள அந்த வண்டி அவரை பக்கத்து மாவட்ட எல்லை வரை போய் விட்டுவிட்டு ரிட்டர்ன் வந்தது. இருந்தாலும் போலீஸ் வண்டியில் இருந்த சில நிமிடங்களில் "சாதிய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதே மரக்காணம் சம்பவத்துக்கு காரணம். அதன் தொடர்ச்சியே இது. நான் அஞ்சலி செலுத்தத்தான் வந்தேன். அரசியல் பண்ண அல்ல. இளவரசன் குடும்பத்துக்கு முதல் கட்டமாக ரூ.1 கோடி உதவித் தொகையை அரசு வழங்க வேண் டும்' என்று கோரிக்கை வைத்து பேட்டியளித்தார். சிவகாமியை போலீஸ் அனுமதிக்காததால் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்     என்று வி.சி.க்கள் கொடுத்த தகவலையடுத்து தொல்.திருமா இரவு 11 மணியளவில் எல்லையில் இருந்து புறப்பட்டு சென்னைக்குத் திரும்பினார். நள்ளிரவு 12 மணியளவில் இளவரசனின் நண்பர்கள் தனித்தனி குழுவாக நான்கைந்து பேர் கூடி "மரண கானா' பாடல்களை சோகமாக பாடி எல்லோரையும் கண்கலங்க வைத்தனர்.

அந்த இரவு இப்படியாய் கழிய மறுநாள் காலை ராமன், சிந்தனைச்செல்வன், தகடூர் தமிழ்ச்செல்வன், வன்னியரசு உள்ளிட்ட வி.சி.க்கள் இறுதி ஊர்வலத்தை எப்படி கொண்டு செல்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். இளைஞர்களோ கறுப்புக் கொடி ஏற்றப் படாத வீடுகளுக்கு கறுப்புக் கொடியை கொடுத்து ஏற்றிடும்படி கேட்டுக் கொண்டனர். காலை குறைந்து பகல் கூடிய பொழுதில் இளவரசனின் உடலை சவப் பெட்டியில் வைத்து கொண்டு செல்ல முடிவானது. அதன்படி பகல் 3 மணியளவில் இளவரசன் இறுதிப்பயணம் தொடங்கியது.

"செத்துப்போயி கூட உடனே புதைக்க முடியாம இப்படி பத்துநாளா வெச்சிப் பாக்க வேண்டியதா போயிடுச்சே... ராசா' என்று பெண்கள் கதறியழ, ஆடாமல் அசையாமல், ஃப்ரீசர் பெட்டியிலிருந்து சவப்பெட்டிக்கு மாறியது இளவரசன் உடல். 300 மீட்டர் தூரமே இருந்தாலும் மிக மெதுவாகவே அந்த தூரத்தை கடந்து முடித்தனர் அஞ்சலி செலுத்த வந்தவர்கள்.

"போன மாசம் 6-ந்தேதி கூட இந்தப் பையன் பிளேடால கையை அறுத்துகிட்டு மெட்ராஸ்ல சாகப் பிழைக்க கிடந்திருக்கான். யாரோ ஒரிசா பையன்தான் காப்பாத்தி மருந்தெல்லாம் போட்டிருக்கான். எதுக்கு லவ்வை பண்ணிட்டு இந்த மாதிரியெல்லாம் பண்றது?' -ஊர்வலத்தில் இப்படி ஒருவர் சொல்ல... அதைக் கேட்ட மற்றவர், "இதெல்லாம் போலீஸ் கட்டி உடற கட்டுக்கதைப்பா' என்றார் ஒரே போடாக. இளவரசனின் இறுதி நிமிடங்களில் பங்கேற்ற பாலபாரதி எம்.எல்.ஏ. "144 தடை என்பது இப்போதைக்கு தேவை யற்ற ஒன்று. இளவரசன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். சுமார் 2000 பேர்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட இளவரசன் உடல், பேழை போல கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்த குழியில் இறக்கி வைக்கப்பட்டது. பெற்றோர் கிருஷ்ணவேணி, இளங்கோவன் பெருங் குரலெடுத்து கதறினர். பத்து நாட்களாய் அழுதழுது ஓய்ந்திருந்த அவர்களின் கண்களில் கண்ணீர் தீர்ந்து போய்விட்டிருந்தது. அவர் களின் இதயம் வடிக்கிற கண்ணீரை வேறு யார் அறிவார் இளவரசனைத் தவிர.

ad

ad