புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013




          ""ஹலோ தலைவரே... இந்திய சுதந்திரப் போராட்டம் நடந் தப்ப ஆசாத் இந்தியான்னு வெளிநாட்டில்  படை திரட்டியபடியே நாடு கடந்த சுதந் திர இந்தியாவை சுபாஷ் சந்திர போஸ் அறிவிச் சாரு.''’’


""இப்பகூட புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நாடு கடந்த தமிழீழத்தை  உருவாக்கி யிருக்காங்களே… அவ்வளவு ஏன், தமிழ் நாட்டு தலைநகரம் சென்னைன்னாலும் எல்லாப் பணிகளும் கொடநாட்டிலிருந்து தானே நடந்துக் கிட்டிருக்குது. தகவல்- தொழில்நுட்பமும் அதிவிரைவு பயண வழிகளும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இதெல் லாம் எளிதாயிடிச்சி. பணிகள் தொய்வில்லாமல் நடக்கு தாங்கிறதுதான் முக்கியம்.''



""சரியா சொன்னீங்க தலைவரே.. ஏற்கனவே ஒரு முறை சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்து கொடநாட்டுக்கு ஜெ. ரெடியானப்ப, அது முதல்வரின் அதிகாரப்பூர்வ ரெசிடன்ஸ் இல்லைன்னு சொல்லி கவர்னர் ரோசய்யா அனுமதி கொடுக் கலை. அதனால அப்ப தன்னோட பய ணத்தை ரத்து செய்த ஜெ., தன்னோட அதிகாரப் பூர்வ முகவரியா போயஸ் கார்ட னோடு,  கொடநாட்டையும் சேர்த்து, கவர்னருக்கு அனுப்பி வச்சாரு. இப்ப கொடநாடும் அதிகாரப்பூர்வ இருப் பிடமாகவும் கேம்ப் ஆஃபீசாகவும் ஆகி விட்டது. அதன் பிறகு ஜெ. இப் போதெல்லாம் கொடநாட்டுக் குப் போகும் போது கவர்ன ருக்கு ஒரு சம் பிரதாயத்துக்கு தகவல் அனுப்புவ தோடு சரி. நீண்டநாள் வெளியூர் பயணம்னா கவர்னரை முதல்வர் நேரில் சந்திப்பது ஒரு மரபா இருந்தது. அதையெல்லாம்  ஜெ. பின்பற்றுவதில்லை. அவர் கொடநாட்டுக்குப் போய்விட்டால் தமிழ்நாட்டு தலைநகரமா கொட நாடு மாறிடுது.''

""அப்படின்னா அமைச் சர்கள், அதிகாரிகளெல்லாம் அங்கேதான் இருக்காங்களா?''


""மந்திரிகள் சிலரோடு ஹாட்லைனில் ஜெ. பேசுவார். மற்றபடி அதிகாரிகளிடம்தான் அவர் அதிகமா பேசுவார். முதல் வரின் நான்கு செயலாளர்களில் உள்துறை விவகாரங்களை கவனிக்கும் வெங்கட்ரமணனும் அவர்கூட ராம லிங்கமும் கொடநாட்டில் ஸ்டே. மற்ற இரண்டு செகரட்டரிகளான ஷீலா ப்ரியாவும் ராமமோகன்ராவ்வும், தேவைப்படுறப்ப மட்டும்தான் கொட நாட்டுக்கு அழைக்கப்படுறாங்க. அதிலும் கடந்த இரண்டு, மூணு நாளா  வெங்கட் ரமணனும் ராமலிங்கமும் கூட சென்னை கோட்டைக்குத் திரும்பிட்டாங்க.''

""மலையிலிருந்து வரும் உத்தரவுகளையெல்லாம் தலைநகரிலிருந்தே நிறைவேற்றிட றாங்களா?''


""அரசாங்கத்தோட முக்கிய துறைகள் சம்பந்தப்பட்ட டெண்டர்கள், அதன் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களையெல்லாம் ராமமோகன்ராவ்தான் கவனிச்சிக்கிறார்.  தலைமைச் செயலாளர்கிட்டேயும் கோட்டையில் இருக்கிற தன்னோட செயலாளர் கள்கிட்டேயும் ஜெ. ஹாட் லைனில் பேசி, விவரம் தெரிஞ்சிக்கிறார். உள்துறை சம்பந்தப்பட்ட விஷயங் களை சி.எம். செகரட்டரி வெங்கட்ரமணனே உள் துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டிகிட்டே கேட்டு, சி.எம்.முக்கு பாஸ் பண்ணிக்கிட்டிருக்கிறார். உள்துறையில் பெண்டிங் கில் இருந்த ஃபைல்களில் 90 சதவீதத்தை நிரஞ்சன் மார்ட்டி க்ளியர் பண்ணி, அதை ஜெ.வின் பார் வைக்கு அனுப்பி வச்சிட் டாரு. அந்த ஃபைல் களெல்லாம் கோட்டையி லேயேதான் இருந்தது.''

""அப்படின்னா அந்த ஃபைலுக்குள்ளே பல முக் கியமான நடவடிக்கைகள் முடங்கியிருக்குமே?''


""ஆமாங்க தலைவரே.. காவல்துறையில் 10 டி.ஐ.ஜி., 20 எஸ்.பி., 28 ஏ.டி.எஸ்.பி., 30 டி.எஸ்.பி. இந்த போஸ்ட்டிங் கெல்லாம் காலியாவே கிடக்குது. அதுபோல எஸ்.பி.யா பதவி உயர்வு பெறவேண்டிய டி.எஸ்.பி.கள், டி.ஐ.ஜி.யா பதவி உயர்வுபெற வேண்டிய எஸ்.பி.கள்  இப்படி பல நிலைகளிலும் உள்ள புரமோஷன்கள் சம்பந்தப்பட்ட ஃபைல் களெல்லாம் முடங்கிக் கிடந்தது.. சி.எம். செகரட்டரி வெங்கட்ரமணன் இது பற்றி ஜெ.வோட கவனத்துக்குக் கொண்டுபோனப்ப சென்னைக்குத் திரும்பியதும் பார்த்துக்கலாம்னு முதலில் சொல்லப்பட்டிருக்கு. ஃபைல்கள் தேங்குவதால் பணிகள் பாதிப்புன்னு சொன்னதும் வியாழக்கிழமையன்னைக்கு காவல்துறையில் 7 பேருக்கு புரமோஷன் போடப்பட்டது.''

""கொலை, கொள்ளை, வழிப்பறின்னு சட்டம்- ஒழுங்குக்கு சவால் விடுற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிச்சிக்கிட்டிருக்கிற நேரத்தில், காவல்துறையின் முக்கியமான ஃபைல்கள் வேகமா க்ளிய ராகணும்.''



""நான் அடுத்த மேட்டருக்கு வர்றேங்க தலைவரே.. . .. ம.தி.மு.கவுக்கு தேர்தல் நிதி திரட்டும் வேலையில் வைகோ தீவிரமா இருக்காரு. பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்காரு. மதுரையில் 50 லட்ச ரூபாய் நிதியளிக்கப்பட்டி ருக்குது.  அதே மதுரையில்  தி.மு.க.வுக்கு 1 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி  வசூலிக்கப்பட்டிருக்கிற நிலையில், ம.தி.மு.க.வுக்கு 50 லட்சம்ங்கிறது பெரிய நிதிதான்ங்கிறது வைகோவோட கணக்கு. செப்டம்பர் 15-ந் தேதி விருதுநகரில் நடக்கவிருக்கும் ம.தி.மு.க மாநாடு தொடர்பா கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்துனப்பதான் இதைச் சொல்லியிருக்காரு வைகோ. அதோடு இன்னொரு முக்கியமான தகவலையும் சொல்லியிருக்காரு.''

""என்ன தகவல்?''


""தேர்தல் நிதி வசூலில் ஏன் இவ்வளவு மும்முரமா இருக்காருங்கிற தகவல்தான். அ.தி.மு.க. சார்பில் வைகோவோடு பேசிக்கிட்டிருந்த ஓ.பி.எஸ்.ஸும் அவர் தலைமையிலான நால்வர் அணியும் இப்ப அவ்வளவா கண்டுக்கிறதில்லையாம். ம.தி.மு.க.வுக்கு 5 எம்.பி. சீட் ஒதுக்கணும்ங்கிறதுதான் வைகோ வைத்த கோரிக்கை. மேலிடத்தில் கேட்டுட்டு சொல்றதா சொன்ன ஓ.பி.எஸ். இப்ப லைனுக்கு வர்ற தில்லையாம். ஏன்னா, 2 சீட்தான் ம.தி. மு.க.வுக்குன்னு கார்டன் முடிவு பண்ணியிருக்குதாம்.  இதில் வைகோ படு அப்செட்.  தி.மு.க. கூட்டணிக்குப் போனால் கலைஞர் மட்டும்தான் மதிப்பாருன்னும் ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் ம.தி.மு.க.வுக்கு மதிப்பு தரமாட்டாங்கன்னும் கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்ன வைகோ, இந்த தேர்தலில் 7 எம்.பி. தொகுதியில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிடும்னும் அதில்  4 தொகுதிகளில் நல்லா கவனம் செலுத்துனா ஜெயிச்சிட முடியும்னும், அந்த நான்கில் இரண்டு தொகுதிகளில் இப்பவே வெற்றி உறுதின்னும் சொல்லியிருக்காரு.''

""ம.தி.மு.க தனித்து நிற்கப்போகுதா?  தே.மு.தி.க என்ன செய்யப்போகுதாம்? அதிருப்தி எம்.எல். ஏக்களுக்கு விஜயகாந்த் அனுப்புன விளக்க நோட்டீசின் காலக்கெடு முடிந்தும் யாரும் பதில் அனுப்பலையே?''


""இந்த நோட்டீஸ் அனுப்புறதுக்கு முன்னாடியே விஜயகாந்த்க்கிட்டே தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகளெல்லாம், அந்த 7 எம்.எல்.ஏ.க்களும் தங்களை நீக்கணும்னு எதிர்பார்த்து செயல்படுறாங்க. அதற்கு நாம ஏன் வழியமைச்சுக் கொடுக்கணும்னும், அ.தி.மு.க தலைமை அவங்களை எப்படி பயன்படுத்துதுன்னு பார்த்துட்டு நடவடிக்கை எடுக்கலாம்னும் சொல்லியிருக்காங்க. ஆனாலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது. அதற்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பதில் அனுப்பாதது மட்டுமில்ல, ராஜ்யசபா தேர்தலில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாதுன்னு தேர்தல் விதிகள் இருக்கும்போது அதற்கு புறம்பா நோட்டீஸ் அனுப்பியிருக்கும்  விஜயகாந்த்மேலே நடவடிக்கை எடுக்கணும்னு தேர்தல் கமிஷன் கிட்டே புகாரும் கொடுத்திருக்காங்க.''

""அரசியலில் எப்படியெல்லாம் திருப்புமுனை ஏற்படுது பார்த்தியா?''



""தலைவரே.. .. விஜயகாந்த் தன்னோட தொகுதியான ரிஷிவந்தியத்தில் வியாழக் கிழமையன்னைக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகக் கட்டிடத்தை திறந்துவைத்து, ஜெ. ஆட்சியை விமர்சனம் பண்ணி பேட்டி கொடுத்தாரு. எத்தனை வழக்குகள் போட்டாலும் சமாளிப்பேன்னும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லைன்னும், காங்கிரஸ் கட்சி ஓட்டுகளை குறிவச்சி உணவுபாதுகாப்பு மசோதாவைக் கொண்டுவர்றதா சொல்லும் ஜெ. மலிவு விலை உணவகத்தையும் மலிவு விலை காய்கறிக் கடையையும் எதைக் குறிவச்சி கொண்டு வந்தாருன்னு கேட்டாரு. அந்த நிகழ்ச்சியை யடுத்து தொகுதியில் இன்னும் சில நிகழ்ச்சிகள் இருந்தது. ஆனா, சென்னையி லிருந்து ஒரு போன் கால் வந்ததால், அவசர அவசரமா பேட்டியை முடிச்சிக்கிட்டு, மற்ற நிகழ்ச்சி களிலும் பங்கேற்காமல் போயிட்டாரு.''

""அப்படியென்ன போன் கால்?''


""நாகர்கோவில் கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜரானப்ப தே.மு.தி.க வக்கீல்களுக்கும் அ.தி.மு.க வக்கீல்களுக்கும் மோதல் நடந்ததே, அதுதொடர்பா கோட்டாறு ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட புகாரில், எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்குது. அதில் விஜயகாந்த் மேலே கொலை முயற்சி வழக்குப் பதிவாகியிருக்குது. அ.தி.மு.க தரப்பு மேலேயும் இதே வழக்குதான். இந்த கேஸ் சம்பந்தமான தகவல்தான் ரிஷிவந்தியத்தில் இருந்த விஜய காந்த்துக்கு சொல்லப் பட்டது. அவர் உடனே அங்கிருந்து கிளம்பிட்டாரு.''

""எத்தனை வழக்குகள் போட்டாலும் சமாளிப்பேன்னு அவர்தானே பேட்டி கொடுத்தாரு?''


""அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே.. … தயாநிதி மாறன் மேலே உள்ள 2ஜி கேஸில் விசாரணை நடவடிக்கை களை முடிச்சிட்டதா சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ சொல்லியிருக்குது. தொழிலதிபர் சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தப்ப 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக் காமல் இழுத்தடிச்சாரு அப்ப மந்திரியா இருந்த தயாநிதி மாறன். அப்புறம், ஏர்செல்லை மலேசியாவை சேர்ந்த மேக் சிஸ் நிறுவனம் வாங்கியதும் அலைக்கற்றை லைசென்ஸ் க்ளியராயிடிச்சி. அதோடு, சன் நெட்வொர்க்கிலும் மேக்ஸிஸ் முதலீடு செய்தது. இது சம்பந்தமான வழக்கில்தான் விசாரணை நடவடிக்கைகளை முடிச்சிட்டதா சி.பி.ஐ. சொல்லியிருக்குது.''

""விசாரணையில் மெத்தனம் கூடாதுன்னு சி.பி.ஐ.யை சுப்ரீம்கோர்ட் கண்டிச்சிருக்கே?''


""மாறன் சகோதரர்களால் தன்னால் இந்த நாட்டிலேய இருக்க முடியலைன்னும், ஏர்செல்லை விற்கச் சொல்லி கொடுக்கப்பட்ட நெருக்கடி சம்பந்தமாகவும் சிவசங்கரன் கொடுத்த  புகார்தான் இந்த விசாரணைக்கு காரணம். மேக்சிசுக்கு தயாநிதி 2ஜி அலைக்கற்றையை க்ளியர் செய்ததுக்கும் அவரது அண்ணன் நிறுவனமான சன் நெட்வொர்க்கில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததற்கும் லிங்க் இருக்காங்கிறது பற்றித்தான் விசாரணையே. ஆனா, மலேசியா நாட்டில் மேற்கொண்ட விசாரணையில் மேக்சிஸிடமிருந்து ஆவணங்களைப் பெறுவதில் முன்னேற்றமில்லைன்னு கோர்ட்டில் சி.பி.ஐ. சொல்ல அதற்குத்தான் நீதிபதி சிங்வி, ராதாகிருஷ்ணன் பெஞ்ச் கண்டனம் தெரிவிச்சிருக்குது. ஏற்கனவே இதே காரணத்தை சொல்லித்தான் சி.பி.ஐ. டயம் வாங்கியிருந் தது. மறுபடியும் அதை யே சொன்னதால்தான் இந்த கண்டிப்பு.'' 

""சிங்வி இன்னும் சில மாதங்களில் ரிடையர்டாகப் போறாரு. அதுவரை நிலைமை யை சமாளிக்கணும்னு சி.பி.ஐ. செயல்படு தாமே?''


""மேக்சிஸ் நிறு வனத்துக்கு வெளி நாட்டு முதலீட்டு விதி களை மீறி ஏர்செல் பங்குகள் விற்கப்பட்ட தற்கு எஃப்.ஐ.பி.பி.ங்கிற வாரியம் அனுமதி கொடுத்திருக்குது. அந்த வாரியத்தின் தலைவரா இருந்தவர் நிதியமைச் சர் ப.சிதம்பரம். இப்ப டிப் பல முடிச்சுகளைக் கொண்டு இந்த கேஸில் அடுத்தகட்டமா என்ன செய்வதுன்னு தெரி யாம சி.பி.ஐ. குழப் பத்தில்தான் இருக்குது.''

""நானும் தயாநிதி பற்றி ஒரு தகவல் சொல் றேன்.. அ.தி.மு.க.வில் சேர்ந்த பரிதி, மேடை களில் கலைஞரையும் குடும்பத்தையும் சகட்டுமேனிக்குப் பேசுவது தி.மு.க.வினரை டென்ஷனாக்கியிருக்குது. அதே நேரத்தில், பரிதியின் பேச்சு பற்றி அறிந்த ஜெ. ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கிறார். அதிக கூட்டங்களில் பேசச் சொன்னதோடு, எம்.பி. தேர்தலில் மத்திய சென்னையில் தயாநிதியை எதிர்த்து பரிதியை களமிறக்குவது பற்றியும் கணக்குப் போட்டிருக்காராம். பரிதிக்கு தி.மு.க. ஆட்சியில் செய்தித்துறை ஒதுக்கப்பட்டப்ப தயாநிதிதான் கலைஞரிடம் சிபாரிசு செய்து வெயிட் டான சி.எம்.டி.ஏ.வையும் சேர்த்து வாங்கிக் கொடுத்தவர். பரிதி தனது கோட்டை அறையிலேயே தயாநிதி படத்தை வைத்திருந்தார். மாறன் சகோதரர்கள் விலகியிருந்த காலத்திலும் தயாநிதியோடு டச்சில் இருந்தவர் பரிதி. இப்ப இரண்டு பேரையுமே மோதவிட்டுப் பார்க்கலாம்னு அ.தி.மு.க மேலிடம் நினைக்குது.''

 குற்றவாளிகளுக்குப் பதவியில்லை!
-சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவிகளைப் பறிக்கும் அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். அர சியலமைப்புச் சட்டத்தின்படி, குற்றவாளிகள் தேர்தலிலேயே போட்டியிடக் கூடாது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(4) பிரிவு, தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் மேல்முறையீட்டுக்குப் பாதுகாப்பாக உள்ளது. கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்று மேல்முறையீடு செய்த எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் பதவியில் நீடிக்கின்றனர். இந்தப் பிரிவை நீக்கி, உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாத்யாயா பெஞ்ச், தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடவும் பதவிகளில் நீடிக்கவும் தடை விதிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய அளவில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்தத் தீர்ப்பின்படி, சொத்துக்குவிப்பு வழக்கை எதிர்கொள்ளும் ஜெ., 2ஜி வழக்கை எதிர்கொள்ளும் ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான தீர்ப்புகள் வந்தால் அவர்களுடைய எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் ரத்தாகும். ஜெ.வைப்  பொறுத்தவரை அவருக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. ஒருவேளை, கீழ்க்கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அதன் காரணமாக பதவி பறிக்கப்பட்டு, பின்னர் மேல்முறையீட்டில் அவர்கள் குற்றமற்றவர்களாகத் தீர்ப்பு வந்தால், மீண்டும் பதவி வழங்கப்படுமா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற விளக்கங் களையும் தெளிவுகளையும் பெறவே இந்த சீராய்வு மனு என்றும், குற்றவாளிகள் பதவியில் நீடிக்கக்கூடாது என்பதில் எங்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்கிறது மத்திய அரசின் சட்டத்துறை வட்டாரம்.


 லாஸ்ட் புல்லட்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல் விழியை கடந்த ஓராண்டுக்கு முன், பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1-ம் தேதி ரகசிய திருமணம் செய்து கொண் டார். இதை எல்லோருக்கும் தெரி வித்துவிடலாம் என சீமானுக்கு வேண்டியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ஆகஸ்ட் 27-ந்தேதி திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது.

அரசு பதவியான அமைச்சர் பதவியில் இருக்கும் மீன்வளத்துறை ஜெயபால், பெட்ரோல் பங்க் நடத்தி அரசின் மானியத்தை பெற்று வருகிறார் என்றும் தேர்தல் வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துக் காட்டி யிருக்கிறார் என்றும் இது கிரிமினல் குற்றமென கலியமூர்த்தி என்பவர் கவர்னர் ரோசய்யாவுக்கு புகார் அனுப்பியுள்ளார். ஜெயபாலை பதவி நீக்கம் செய்வதுடன் அவர் மீது வழக்குத் தொடர அனுமதிக்கவேண்டும் என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளது.  கிரிமினல் குற்றச்சாட்டில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல். ஏ.க்களின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், மந்திரி ஜெயபால் மீதான புகார் குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது ராஜ்பவன்.

பெண் எஸ்.ஐ.யின் புகாருக்குள்ளான குன்னூர் மாஜிஸ்ட்ரேட் தங்கராஜ் கைதாகி, ஜாமீனில் வெளிவந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். பெண்கள் அமைப்பினரும் இன்னும் சிலரும் அவருக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இடமாற்றம் செய்யப்பட்டு ஹைகோர்ட் சட்டப்பத்திரிகையின் துணையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் எம்.பியான நடிகர் ரித்தீஷ், அழகிரியின் சிபாரிசில் சீட் வாங்கியவர். அழகிரி அமைச்சராக இருந்தபோது அவரது துறையில் காரியம் முடித்துத் தருவதாகச் சொல்லி மும்பையைச் சேர்ந்த ஆர்.பி. எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஏதோ பெற்றி ருக்கிறார் ரித்தீஷ். காரியமும் முடிக்கவில்லை. பெற்ற தையும் திருப்பித்தரவில்லை. நிறுவனம் கேட்டதற்கு, ஒரு பங்கு  மட்டும் திரும்பக் கிடைத்துள்ளது. இதுபற்றி அழகிரியிடமே முறையிட்டுள்ளது நிறுவனம். எம்.பி. ரித்தீஷோ அழகிரியின் கண்களில் படுவதையே தவிர்த்து வருகிறாராம்.

சிறைவாசத்துக்குப் பின் உடல்நலிவுற்று, பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்ட பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு மீண்டும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டு மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். குடும் பத்தினர் தவிர மற்றவர்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப் படுவதில்லை. தர்மபுரி இளவரசன் மரணச் செய்தியை ராமதாஸிடம் அன்புமணி சொன்னபோது அதிர்ச்சியடைந்த அவர், ""இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் பா.ம.க.வுக்கு எதிராக இருக்குது. இந்த நேரத்தில் நாம் எது சொன்னாலும் நெகட்டிவ்வாகத்தான் போகும். அதனால் நம்ம நிர்வாகிகள் இதுபற்றி எதுவும் பேச வேண்டாம்'' என்று சொல்லியிருக்கிறார்.

திருச்சி திருவெறும்பூரில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கார்த்திகேயினி. இவர் ஒரு பாஸ்போர்ட்டைத் திரும்பத் தருவதற்கு 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தனக்கு உடல்நிலை சரியில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்து திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக ஐ.சி.யூ வார்டில் ராஜஉபசரணையுடன் ரெஸ்ட் எடுத்துவருகிறார் இன்ஸ்பெக்டர். இவருடைய கணவர் கார்த்திகேயன் ஏற்கனவே இதே மருத்துவமனையில் டீனாக இருந்து தற்போது சேலம் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றுகிறார். பழைய டீனின் மனைவி என்ற கோதாவில்தான் பெண் இன்ஸ்பெக்டருக்கு இத்தனை உபசாரமாம்.

உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் பலியான விமானி ப்ரவீனின் பெற்றோருக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவிப்பதையறிந்த மதுரை எம்.பி அழகிரி, சென்னையிலிருந்து கடந்த புதனன்று மதுரை சென்று ப்ரவீன் வீட்டில் அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர் வெளியே வந்த நேரத்தில், மத்திய அமைச்சர் வாசன், ஆறுதல் சொல்வதற்காக அங்கு வந்தார். வாசனின் பக்கத்திலிருந்த எம்.பி. சித்தனைப் பார்த்த அழகிரி, என் தொகுதிக்கு வாசனை என்கிட்டே சொல்லாமலேயே அழைச்சிக்கிட்டு வந்திருக்கீங்களே என்று கேட்க, அதற்கு பதிலளித்த வாசன், உங்க வீட்டுக்குப் போன் போட்டேன். நீங்க இங்கே இருப்பதா சொன்னாங்க. இங்கேயே சந்திச்சிடலாம்னு வந்தேன் என்றார் கலகலப்பாக. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க விலகிய சமயத்தில்  சென்னையில்  அழகிரியும் வாசனும் சந்தித்துப் பேசிய நிலையில், மதுரையிலும் எதிர்பாரா சந்திப்பு நடந்திருக்கிறது.

ad

ad