புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2013

கொழும்பில் தமிழ்ப் பெண்களின் நடையை நாடாளுமன்றில் வர்ணித்த அஸ்வர் எம்.பி
கொழும்பில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யார நடை போட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பின் வெள்ளவத்தை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யாரமாக நடைபோட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அந்தக் காட்சியை கண்ணை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்.
இன்று மட்டக்குளியிலிருந்து கொட்டாஞ்சேனை முதல் வெள்ளவத்தை வரையில் தமிழர்களின் ஆதிக்கமே இருக்கின்றது. கலை நிகழ்வுகள், இசை நிகழ்வுகள், வர்த்தக நடவடிக்கைகள் என தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்குப் போய்ப் பாருங்கள். தினமும் புத்தக வெளியீடுகள், கலை நிகழ்வுகள், கம்பன் விழா என களைகட்டுகின்றது.
அழகான தமிழ்ப் பெண்கள் வெள்ளவத்தையில் ஒய்யார நடைபோட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்தக் காண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதற்கு முன்னர் தமிழர்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை காணப்பட்டது என்றார்.

ad

ad