புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

நான் இந்தியாவின் தெரிவு அல்ல; விக்னேஸ்வரன் கூறுகிறார்

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கியமைக்கு இந்தியாவே பின்னணியில் இருப்பதாக வெளியான செய்திகளை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
“பத்திரிகைகளில் வெளியான செய்திகளை நானும் பார்த்திருக்கிறேன். அவற்றில் எந்த உண்மையும் இல்லை. இந்தியாவிலிருந்து எவரும் இது தொடர்பாக கதைத்திருக்கவில்லை.நானும் அங்குள்ளவர்களிடம் இது பற்றிப் பேசியிருக்கவில்லை’ என்று நேத் எப்.எம்.வானொலிக்கு நீதியரசர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நியமித்திருக்கிறது.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜாவை மேவி நீதியரசர் வேட்பாளராக நியமிக்கப்பட்டமை இந்தியாவின் ஆதரவினாலேயே என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன.
நீதித்துறையில் பங்களிப்பை செலுத்தியிருந்த விக்னேஸ்வரன் அரசியலுக்கு பிரவேசிக்க நேர்ந்தமை தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, தான் மிகவும் தயங்கிய போதும் பலர் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து நம்பிக்கையூட்டியதன் பிரகாரமே அரசியலில் பிரவேசிக்க இணங்கியதாகவும் நீதியரசர் கூறியுள்ளார்.
மாகாணங்களுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்ற நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதியரசர், பொலிஸ் அதிகாரம் பொதுமக்களின் பாதுகாப்புக்கே என்று கூறியுள்ளார்.
“மாகாணத்தின் காணி விவகாரங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வெளியேயுள்ளவர்கள் விரும்புவதற்கு உரிமை இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்,
 தெரிவு செய்யப்பட்டால் 4 வருடங்களுக்கு முன்பு முடிவடைந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பாக செயற்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.
“அதேசமயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாக அவர் குறிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியுடனோ அல்லது அவரின் பிரதிநிதியான ஆளுநருடனோ நீங்கள் சண்டையிட முடியாது. ஆதலால் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஆதலால் முறிவை ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டியுள்ளது. இது 13 ஆவது திருத்தத்தின் பிரகாரமான சட்டமாக இருக்கின்றது’ என்று அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் கடும் போக்கு தேசியவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய இராஜதந்திரியாகவும் சர்வதேச மட்டத்திலும் பிரிவினைவாத மோதலை விரிவுபடுத்துவதற்கான தமிழ்ப் பிரிவினைவாத இயக்கத்தின் பிரதிபலிப்பு என்று விமர்சித்திருக்கிறது.
“அவர் சட்டவல்லுநராகவும் புத்திஜீவியாகவும் இருக்கிறார். ஆனால் தமிழர்கள் மத்தியிலுள்ள கடும் தீவிரவாத சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறார். தமிழ்ப்பிவினைவாதப் போராட்டம் புதிய பரிமாணத்தை எடுத்திருப்பதை இது வெளிப்படுத்துகிறது.இது இலங்கையின் ஒற்றையாட்சிக்கு சவாலாக அமையும்’ என்று ஜாதிக ஹெலஉறுமயவின் பிரதி செயலாளர் உதயகம்மன்பில கூறியுள்ளார்,

ad

ad