புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2013

வெளிநாட்டில் தங்கியிருந்தநபர் இலங்கை திரும்பிய போது புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த தமிழ் இளைஞனொருவர்  இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிவராஜா பிரகாஷ் என்ற இளைஞனே பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 2வது மாடியிலிருந்து குதித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர், 6 நாட்களுக்கு முன்னர், இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த கைதுகள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் உறவினர்களுக்கும் அறிவிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad