புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

கிண்ணம் யாருக்கு: இந்திய - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
மேற்கிந்திய தீவுகள் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று  போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளிடம் தோல்வி கண்டது. ஆனால் அடுத்த 2 லீக் ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளுக்கு எதிராக அபார வெற்றி கண்டு போனஸ் புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய அணியின் தலைவர் டோனி 2-வது லீக் ஆட்டத்தின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் டோனி அணியில் இடம் பெறவில்லை. தற்போது டோனியின் காயம் நன்கு குணமடைந்து வருவதாகவும், இறுதிப்போட்டியில் டோனி விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றும் தற்காலிக அணித்தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்.
டோனி விளையாடினால் விஜய் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.
இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான ஒரு லீக் ஆட்டத்தில் வெற்றியும், மற்றொரு ஆட்டத்தில் தோல்வியையும் சந்தித்தது.  2 வெற்றி, 2 தோல்வி கண்டு 9 புள்ளி பெற்றாலும், ஓட்ட நிகர அடிப்படையில் 2-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இலங்கை அணியில் மஹேலா ஜெயவர்த்தனே, சங்கக்கரா ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அவர்களின் பேட்டிங்கை பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு முடிவாகும். பட்டத்தை வெல்ல இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 142 ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 77 முறையும், இலங்கை அணி 53 முறையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 11 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.
இன்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறது. இன்று 20 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான உத்தேச அணிகள் வருமாறு:
இந்தியா: டோனி (தலைவர்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட்கோலி, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ்யாதவ்.
இலங்கை: மேத்யூஸ் (தலைவர்), உபுல் தரங்கா, ஜெயவர்த்தனே, சங்கக்கரா, சன்டிமால், திரிமன்னே, ஜீவன் மென்டிஸ், தில்ஹரா, ஹெராத், எரங்கா, மலிங்கா.

ad

ad