புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013

கிழக்கு மாகாண சபைப் பிரச்சினைக்கு சந்திரகாந்தனே காரணம்
கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் பின்னால், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில செய்திதாள் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நிர்வாக செயற்பாடுகளில் அக்கறை காட்டுவதில்லை என்றும், அவர் மேற்கொள்ளும் எந்த தீர்மானங்களையும் தங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்றும், மாகாண சபையின் அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி மாகாண சபை நடவடிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்த வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன் போது அவர்களை மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனருடன் ஒத்துப் போகுமாறு ஜனாதிபதி கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த முறுகல் நிலையின் பின்னணியில் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள முதலமைச்சரை மாற்றி மீண்டும் அந்த பதவியில் சிவநேசத்துரை சந்திரகாந்தனை அமர்த்துவதற்கு இந்த சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad