புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

குற்றவாளி அரசியல்வாதிகள் பதவியில் நீடிக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

வாக்களிக்கும் உரிமை பெற்ற கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்..
..என சமூக ஆர்வலர் லல்லி தாமஸ் மற்றும் லோக் பிரகாரி என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தன.
தற்போதைய நடைமுறையின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர், அந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் மக்களால் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்ற தகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் ஒய்யாரமாக வலம் வர முடிகிறது.
கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் கூறும் வேளையில், தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட ஒருவர் பதவி காலத்தின் போதே கிரிமினல் வழக்கில் சிக்கி, தண்டனை வழங்கப்படும் நிலையில் அவர் பதவியில் நீடிப்பது எப்படி முறையாகும்? என மனுதாரர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நடைமுறை கிரிமினல்கள் எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ. ஆகவோ வருவதை தடை செய்யும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரரின் வக்கீல் வாதாடினார்.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாதயா ஆகியோர் கிரிமினல் வழக்கில் 'தண்டனை அளிக்கப்பட்ட உடனேயே மக்கள் பிரதிநிதிகளாக அவர்கள் நீடிக்க முடியாது.
மேல் முறையீடு செய்யப்போகிறேன் என்று காரணம் கூறி இனி யாரும் எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ பதவிகளில் நீடிக்க முடியாது.
இதற்கு முன்னர் வரை மேல் முறையீடு செய்துள்ளவர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது' என்று தீர்ப்பளித்தனர்.
வேட்பு மனுக்களில் தாக்கல் செய்யப்பட்ட விபரங்களின்படி பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற மேல்முறையீடு செய்துள்ளனர்.
பாராளுமன்ற எம்.பி.க்களில் 15 பேர் மீது கொலை குற்ற வழக்குகளும், சுமார் 150 எம்.பி.க்கள் மீது 150 கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad