புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2013

,



அம்மாவுக்கு தெரிஞ்சா பதவிக்கு ஆபத்து! காங். உறுப்பினரை மேடையிலிருந்து கீழே இறக்கிய அதிமுக அமைச்சர்!
சென்னை முகப்பேர் மேற்கில் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்காமல் இருந்து வந்தது. இந்த பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மதுரவாயல் சட்டமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் பீமா ராவ் மற்றும் அந்த பேருந்து நிலையம் அமைந்து இருக்கும் சென்னை மாநகர வார்டு 91′ன் மாநகர உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் ஆகியோரின் முயற்சியால் இந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு முகப்பேர் குடியிருப்போரின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டது.


இந்த பேருந்து நிலையம் 05.07.2013 மாலை 5:00 மணியளவில் திறக்கப்படுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அனைவரும் மாலை 5:00 மணி திறப்புவிழா என்பது மாலை 6:00 மணி ஆகும் என்று நினைத்தனர். திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினர் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி மாலை 4:00 மணிக்கு விழா மேடைக்கு வந்து, இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

விழா மேடையில் அமைச்சர் மூர்த்தியுடன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் பீமா ராவ், சென்னை மாநகரின் துணை மேயர் பெஞ்சமின், சென்னை மாநகர 91′ம் வார்டு காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்செல்வன், சென்னை மாநகர 143′ம் வார்டு ஆ.தி.மு.க உறுப்பினர் நளினி இமானுவேல், ஆ.தி.மு.க உறுபினர்கள் அலெக்ஸ், அய்யனார், இமானுவேல் மற்றும் பலர் இருந்தனர்.

மேடையில் 91′ம் வார்டு உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வனை கண்ட அமைச்சர் மாதவரம் மூர்த்தி, தமிழ்செல்வனை அருகில் அழைத்து தான் மேடையிலிருக்கும் வரை அவரை மேடையிலிருந்து இறங்கி கீழே இருக்கும்படி கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி மேடையில் அமைச்சர் அருகில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இருந்தால் அவருடைய அமைச்சர் பதவிக்கு பங்கமாக அமையும் என்றும் அமைச்சர் தமிழ்செல்வனிடம் கூறியதாக அங்கு இருந்த பொது மக்கள் முனுமுனுத்ததாக சொல்லப்படுகிறது.

தமிழ்செல்வன் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும் முன்னால் அமைச்சர் கக்கன் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்காக உழைக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியை மதிப்பளிக்காமல் கட்சி பாகுபாடோடு மேடையிலிருந்து கீழே இறக்கியதை பலரும் புலம்பினர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் மிகவும் மதிக்கப்பட்ட கக்கன்ஜி அவர்களின் பேரனை மேடையிலிருந்து கீழே இறகிவிட்ட செய்தி முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு சென்றுள்ளதா என்பது ஒரு கேள்விக்குறி.
 

ad

ad