புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,

தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைக்கப்படுகிறார்! - கே.பி. வடக்கில் போட்டி: அமைச்சர் மைத்திரிபால
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இணைக்கப்படவுள்ளார். 
இதற்கான நியமனக் கடிதம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நேற்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இவருக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டவுடன் வட மாகாண சபைத் தேர்தலில் ஆளுந்தரப்பு வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படவுள்ளார்.
அத்துடன் இவர் இந்தக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளிலும் வடபகுதியில் ஈடுபடத்தப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழினி வட மாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தமிழினி புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றங்கள் எதுவும் இவரை குற்றங்காணவில்லை. எனவே வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர் செய்துள்ள விண்ணப்பத்தை கருத்தில் எடுக்காமல் விடுவதற்கான காரணமெதுவுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் 2009ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி தமிழினி அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் 2013ம் ஆண்டு ஜுன் 26ம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.பி. வடக்கில் போட்டி: அமைச்சர் மைத்திரிபால
விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களான கே.பி., தயா மாஸ்டர், தமிழினி ஆகியோர் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நகுலன், ராம் ஆகியோர் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தற்போதைய நிலையில் ஜுலை ஆறாம் திகதிக்குப் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தேர்வுசெய்வதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இறுதிப்பட்டியல் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
எனினும் கே.பி. வடக்கில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும்,குறைந்த பட்சம் யாழ். மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் குழுத் தலைவர்களாக தன்னுடைய கட்சியினரையே நியமித்துகொள்ள அவர் முயற்சி செய்வதாகவும் அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மூலம் முன்னாள் விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை சாதாரண வேட்பாளர்களாக்கி அவர்களின் செல்வாக்கைக் குறைக்கவும் அவர் முயற்சி செய்வதாக தெரியவந்துள்ளது.

ad

ad