புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2013

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம்! பின்னணி என்ன?
அரியலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமானகே.கே.சின்னப்பன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.,
பி.ஆண்டிவேல் ஆகியோர் கட்சியின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் முரணாக செயல்பட்டதால் அ.இ.அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
1991ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.கே.சின்னப்பன், பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இவர் தனது மகளை முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ., கா.சொ.கணேசன் மகன் கா.சொ.க.கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தார். கண்ணன் தற்போது டி.பழூர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். 
தி.மு.க.வினருடன், கே.கே.சின்னப்பன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக, கட்சியில் உள்ள எதிர்க்கோஷ்டியினர் தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக்கு புகார்கள் கொடுத்தப்படி இருந்தனர். 
கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய திமுக எம்எல்ஏக்களை தனது கல்வி நிறுவனத்துக்கு அழைத்து விழா நடத்தியதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். இவரும் அதற்கு விளக்கம் சொல்லியே வந்துள்ளார். தான் நடத்தி வரும் கல்வி நிறுவத்திற்கு நில ஆக்கிரமிப்பு செய்தாக இவர் மீது நிலஅபகரிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்தநிலையில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். 
2001ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் பி.ஆண்டிவேல். பின்னர் ஆட்சி மாற்றத்தினால் கட்சி நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தார். தொடர்ந்து 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தும், கட்சியில் ஈடுபாடு இல்லாமலும், கட்சி கூட்டங்களில் பங்கேற்காமலும் இருந்து வந்தார். 
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம், என்.பண்ணப் பட்டியை சேர்ந்தவர் வெள்ளமலை. இவர் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ஓம்சக்தி ஈமுபண்ணையில், ரூபாய் 1.50 லட்சம் முதலீடு செய்தால் ஆறு ஈமு கோழிகள் கொடுப்பதாகவும், இதை வளர்த்தால் மாதம் ரூபாய் 7 ஆயிரம் என தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தருவதாக மாஜி எம்.எல்.ஏ., ஆண்டிவேல் உறுதியளித்தார். இதை நம்பி பணம் செலுத்தியதாகவும், உறுதியளித்தபடி பணம் தரவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். தனது ஊரைச்சேர்ந்த 23 பேர் ரூபாய் 54 லட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து ஆண்டிவேல் மீது வழக்குபதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். 

ad

ad