புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

போர்க்குற்றங்களில் இருந்து எம்மை பாதுகாக்க மகிந்த, கோத்தா உள்ளனர்! இராணுவ தளபதி பெருமிதம்
யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் எமது இராணுவ வீரர்களுக்குப் பக்க பலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் உள்ளனர் என இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜெனரல் ஜெயசூரிய, வெலிக்கந்தை இராணுவத் தளத்தில் நேற்று படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்கையில்,
முப்பது வருட காலம் இடம்பெற்ற யுத்தம் ஒன்றை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். இந்த நிலையில் மீண்டும் இந்த நாட்டில பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்.
இந்த விடயத்தில் எமது படையினர் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவர். எந்தத் தரப்பினராலும் இனிமேல் இந்த நாட்டில் தீவிரவாதத்தை ஏற்படுத்த முடியாது.
கடந்த காலங்களில் வெளிநாட்டைத் தளமாக கொண்ட சக்திகள் எமது இராணுவத்துக்கு எதிரான அபாண்டமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
அதிஸ்டவசமாக, எவருக்கும் அஞ்சாமல், எல்லாச் சதிகளையும் தோற்கடித்து, இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றுவத்தற்கு ஜனாதிபதியும் பாதுகாப்புச்செயலரும் எம்முடன் நின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ad

ad