புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

டி.எஸ்.பி.யை நோக்கி அரிவாள் வீச்சு! அத்வானி பாதையில் குண்டு வைத்த நபரை பிடிக்கும்போது பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை
, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை மடக்கி பிடித்தனர்.

அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 
வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை' மதுரையில், 2011 அக்டோபர் 28 ல், அத்வானி துவக்கினார். அவர் பயணப்பாதையான, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி ஓடைப் பாலத்தில், பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 
குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் "போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார். 
இந்தாண்டு மார்ச் 27ல், "போலீஸ்' பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார். 
இவ்வழக்கில், தலைமறைவாக இருந்த தென்காசியை சேர்ந்த முகமது ஹனீபாவை, டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவினர், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பரசுராமபுரத்தில் கைது செய்தனர். 
-சக்திவேல்

ad

ad