புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2013

,

உறவினர்கள் கோரிக்கையின்படி இளவரசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது!
தருமபுரியில் காதல் திருமணம் செய்த இளவரசன் வியாழக்கிழமை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே சடலமாக கிடந்தார். அருகில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது.
அதில் ஒரு பை இருந்தது. இரண்டையும் கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது உறவினர்கள் மறியல் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மாலை 5.30 மணி வரை அங்கேயே இருந்த உடல், போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 
இந்தநிலையில் இன்று (05.07.2013) காலை இளவரசனின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், டாக்டர்கள் குழுவை வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தங்கள் தரப்பில் இருந்து இரண்டு மருத்துவர்களை அணுப்புவோம் அவர்களும் அந்த குழுவில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரேத பரிசோதனை நடந்தது. அரசு தரப்பில் இருந்து மருத்துவர்கள் தண்டர்சீப், ரவிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனையின்போது, இளவரசன் உறவினர்களின் கோரிக்கைப்படி, அவர்கள் தரப்பிலிருந்து வழக்கறிஞர் தமயந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி நந்தன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர்.

ad

ad