புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2013

,

சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்!

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மலிவு விலை அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் எலுமிச்சை சாதம்,
கறிவேப்பிலை சாதம் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது.

இந்த உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் சப்பாத்தி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் மேலும் 800 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்க அரசு உத்தர விட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 200 உணவகங்கள் திறக்கப்பட உள்ளன. இதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்ட உடன் புதிய உணவகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கும். 
அதன்பிறகு படிப்படியாக 800 உணவகங்களும் அமைக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனித்துறை அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தனித்துறை செயல்படும். இதற்கு இன்னும் 2 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிகிற

ad

ad