புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2013

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆராய மீண்டும் கூடுகிறது உயர்மட்டக்க
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த தீர்மானம் இன்னமும் எடுக்கப்படாத நிலையில் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை மீளவும் கூடி ஆராயவுள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களும் மேற்படி உயர்மட்டக்குழு கூடி ஆராய்ந்திருந்த நிலையிலும், எவ்விதமான முடிவுகளும் எட்டப்படவில்லையெனவும், தொடர்ந்தும் கட்சிகள் கால அவகாசம் கோருவதுமாக உள்ளதாக அந்த உயர்மட்டத் தகவல்கள தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ரெலோ அமைப்பு தமது கட்சி மட்டத்தில் கூடி ஆராய்ந்து தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்று நடைபெறவிருந்த உயர்மட்டக்குழு கூட்டம் பிற்போடப்பட்டு எதிர்வரும் திங்கள் கிழமை மீளவும் கூடி ஆராயவுள்ளதாகவும். இந்தக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நம்பப்படுகின்றது.
இதேவேளை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசா, சீ.வி.விக்னேஸ்வரன் என்ன கருத்துருவாக்கங்களை வடக்கி லுள்ள ஊடகங்கள் தொடர்ந்தும் செய்துவரும் நிலையில், இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென தெரிவிக்கும் குறித்த உயர்மட்டக் குழு,
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நிற்கும், மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்ட வடக்கு தமிழனை கூட்டமைப்பு நிச்சயமாகத் தெரிவு செய்யும் எனவும், மக்களுடைய நம்பிக்கைக்கும், கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கும் கூட்டமைப்பு விசுவாசமாக இருக்கும் எனவும் மக்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும் எனவும்,
முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறி என்ற பிரசாரங்களுக்கு எடுபடவேண்டாம், அவ்வாறானதொரு நிலை கூட்டமைப்புக்குள் இல்லை எனவும் குறித்த உயர்மட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ad

ad