புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2013

இலங்கை மாணவியின் உயர்கல்விக்கு உதவிய நடிகர்  சூர்யா
தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்கல்விக்கு தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா உதவி செய்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா என்ற மாணவி பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.
அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம் கூறினார்.
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது.
அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.
தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad