புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2013

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இணைத்து விட முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இணைத்து விட முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுகவும், தேமுதிகவும் கோரியிருந்தன. ஒருவழியாக காங்கிரஸ் மேலிடம் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது.
இதன் மூலம் லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கைவிட்ட தேமுதிகவை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் உங்களை நம்பித்தானே களத்தில் இறங்கினோம்..காலைவாரிவிட்டீர்களே? என்ற கோபத்தில் இருக்கிறாராம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதற்கு பதிலாக லோக்சபா தேர்தலில் திமுகவுடன் இணைந்து களம் இறங்குவோம் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம்.
அப்படி திமுக அணியில் தேமுதிக இணையும்போது அக்கட்சி விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் வாங்கித் தருவோம் என்ற உறுதிமொழியையும் காங்கிரஸ் தரலாம் என்றும் கூறப்படுகிறது.

ad

ad