புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2013

பிரித்தானிய நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பை ரத்துச்செய்த கோட்டாபா

பிரித்தானிய நாடாளுமன்றக்குழுவுடன் இடம்பெறவிருந்த சந்திப்பை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ரத்து செய்துள்ளார்.
இந்த சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது இறுதிநேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரக்காலமாக இலங்கையில் தங்கியுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக்குழு இன்று கொழும்பில் சந்திப்புக்களை நடத்தியது.
அமைச்சர்களான பசில் ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இந்தக்குழுவினர் சந்தித்தனர்.
இதேவேளை தங்காலையில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரித்தானிய பிரஜை ஒருவரின் கொலை தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்படும் என்று இலங்கையின் அமைச்சர்கள், பிரித்தானிய குழுவினரிடம் உறுதியளித்துள்ளனர்.
எனினும் இந்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையெனில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் போது பிரித்தானிய பிரதமர் கேள்வி எழுப்புவார் என்றும் பிரித்தானிய நாடாளுமன்றக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.

ad

ad