புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2013



திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்க கட்டி பறிமுதல் 
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் விமான நிலைய இமிகிரேசன் பிரிவு அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் தாமரை சென்றார். 


அப்போது கழிவறையில் ஒரு தங்க கட்டி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் விமான நிலைய மேலாளர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். 
அவர் வந்து பார்த்த போது அந்த தங்க கட்டி 1 கிலோ எடை இருக்கும் எனவும் தெரியவந்தது. 24 கேரட் கொண்ட அந்த தங்க கட்டியின் மதிப்பு ரூ.29 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். 
கழிவறையின் நுழைவு வாயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கழிவறைக்கு சென்று வந்த பயணிகள் யார்? யார்? என அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். 
அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பயந்து கடத்தல் ஆசாமிகள் தாங்கள் கொண்டு வந்த தங்ககட்டியில் ஒன்றை பதற்றத்தில் தவற விட்டார்களா? எனவும் அதிகாரிகள் தங்கள் விசாரித்து வருகின்றனர்.

ad

ad