புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2013

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக 15 நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்து பொதுநலவாய மாநாடு தொடர்பிலான அனைத்து ஏற்பாடுகளையும்
கண்காணிப்பார்கள் என்று பொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.

பொதுநல வாய மாநாட்டிற்கு கலந்துக் கொள்வதற்காக இலங்கை வரும் பன்னாட்டு தலைவர்களின் பாதுகாப்பு உட்பட ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மேற்படி குழு கூடிய அவதானம் செலுத்தி செயற்படும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ???? திகதி வரையில் நடைபெறவுள்ள மேற்படி மாநாட்டின் ஏற்பாட்டு பணிகள் முழுமைக் கண்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் விசேட பேச்சுக்களை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.

இலங்கை வந்தள்ள பொதுநலவாய விசேட கண்காணிப்புக் குழு குறிப்பாக தாமரைத் தடாகம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் பண்டாரநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் உட்பட மாநாடுடன் தொடர்புபட்டு இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ad

ad