புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2013


சேரன் மகள் குடும்ப நண்பரிடம் ஒப்படைப்பு: 15 நாட்கள் தங்கியிருப்பார்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
 


திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி. இவர், தன்னுடைய காதலன் சந்துருவை தந்தை மிரட்டுவதாக சொல்லி 02.08.2013 அன்று போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகார் மனு தொடர்பாக சேரனையும், எதிர் தரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அப்போது தாமினி பிடிவாதமாக காதலன் வீட்டாருடன்தான் செல்வேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பெண் போலீஸ் கமிஷனர் ஷியமளா தேவி இருதரப்பினரிமுடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமூக முடிவு எட்டாமல் இருந்தது.

இதற்கிடையில் சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள் சென்னை ஐகோர்ட்டில் தாமினியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் கோர்ட்டில் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்பான விசாரணை திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. 
அப்போது, சேரனின் தரப்பு, எங்கள் மகள் உரிய முடிவு எடுக்க அவளுக்கு போதிய அவகாசம் வேண்டும். அதுவரை பொறுப்புள்ள தனிநபர் ஒருவரிடம் விட்டுவைக்க கோர்ட் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பெண்கள் காப்பகத்துக்கு அனுப்புவதில் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
அதேபோல் பெண்கள் காப்பகத்துக்கு செல்ல தாமினியும் மறுத்துவிட்டார். இந்த சூழ்நிலையில் தாமினி படித்த அன்னை வேளாங்கண்ணி பள்ளியின் தாளாளரும், சேரனின் குடும்ப நண்பருமான பி.டி.கே.பிள்ளையிடம் தாமினியை ஒப்படைப்பது என்று முடிவானது. 

அதற்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, தாமினி பள்ளி தாளாளர் பிள்ளை வசம் ஒப்படைக்கப்பட்டார். 15 நாட்கள் கழித்த பின்னர் இந்த விசாரணை நடைபெறும் என்று கோர்ட் தெரிவித்துள்ளது. 

ad

ad