புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013


 லாஸ்ட் புல்லட்!

ஆகஸ்ட் 17. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 50-வது பிறந்த நாள் நிறைவு. முரசொலி  மாறன் பிறந்தநாளும் அதே தேதிதான் என்பதால் அதற்காக விழாவில் கலந்துகொள்ள கோபால புரத்திலிருந்து கிளம்பிய கலைஞரை வீட்டின் முன் பகுதியில் சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமா. கலைஞர் அன்புடன் வாழ்த்தினார். கட்சி நிர்வாகிகளான ஸ்டாலின், ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் சென்று திருமாவை வாழ்த்தினர். பொன்விழா நிறைவுவிழாவை வரும் 31-ந் தேதி சென்னை தீவுத்திடலில் நடத்த சிறுத்தைகள் முடிவு செய்திருந்தனர். அரசு அனுமதி கிடைக்கவில்லை. ஒய்.எம்.சி.ஏ அரங்கமும் கிடைக்கவில்லை. அதனால் காமராஜர் அரங்கில் சிறப்பாக நடத்த சிறுத்தைகள் திட்டமிட்டுள்ளனர். கலைஞர் தலைமையில் நடக்கும் விழாவில் வீரமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கிறார்கள்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பங்கேற்கும் விழாவில் சொத்துக்குவிப்பு வழக்குகளை எதிர்கொள்ளும் குற்றப்பின்னணி கொண்ட ஜெ. ஒரே மேடையில் பங்கேற்க அனு மதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அருண் மனு செய்திருந்தார். பரபரப்பான இந்த வழக்கில் வாதங்களும் சூடாக இருந்தன. மனுநீதிச் சோழனைப்போல நீதித்துறை செயல்படுகிறது என்று சொல்லி, மனுவைத் தள்ளுபடி செய்தது தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணா அடங்கிய பெஞ்ச்.

அமைச்சர் சின்னய்யாவின் மாமனார் தாமோ தரன் கடந்த 19-ந் தேதி தற்கொலை செய்துகொண் டார். 76 வயதான இவரின் மரணம் பதற்றத்தையும் பரபரப் பையும் ஏற்படுத்த கட்சி நிர்வாகி கள் கூடினர். ஆனால், போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. கண்பார்வை தொந்தரவு காரணமாக விரக்தியில் தற் கொலை செய்துகொண்டார் என போலீஸ் தரப்பு கூறினாலும் அமைச்சர் குடும்பத்தில் பல பிரச்சினைகள் என்றும் மாமனார் தாமோதரன் மனம் உடைந்து போயிருந்தார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஜெ. அரசால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி கிருஷ்ணன் குழுவின் பரிந்துரையினால் பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த சுமார் 40ஆயிரம் அரசு ஊழியர் களுக்கு சம்பளக் குறைப்பு ஏற்பட்டிருப்பதை நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது. இந்த சம்பளக் குறைப்பை செப்டம்பர் முதல் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் சிலர் ரிட் மனு தாக்கல் செய்து ஸ்டே பெற்றுள்ளனர். இன்னும் சிலரும் ரிட் மனு தாக்கல் செய்யும் முயற்சியில் உள்ளனர். ஸ்டே வாங்கியவர்களுக்கு சம்பளக் குறைப்பு வேண்டாம் என கருவூலத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். யார் யார் ஸ்டே வாங்கியவர்கள் எனக் கணக் கெடுப்பதில் தலைவலி உண்டாகியிருக்கிறது கருவூலத்துறை அதிகாரிகளுக்கு.

தமிழக காங்கிரசுக்கு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் கட்சித்தலைவர் ஞானதேசிகன் நீண்ட முயற் சிக்குப்பின் வெற்றி பெற்றிருக் கிறார். விரைவில் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளார் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக்.

கள்ளக்குறிச்சியில் உள்ள வக்ஃப் போர்டுக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில், கோர்ட் உத்தரவுப்படி கடை வாடகை உயர்த்தி நிர்ணயித் தார் வக்ஃப் சேர்மன் தமிழ்மகன் உசேன். அதை வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி அமல் படுத்தினார். இந்த உத்தரவை ஏற்க மறுத்த 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தக் கடைக்காரர்கள் அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ அழகுவேல் மூலம், மாவட்ட மந்திரி மோக னின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றனர். தனக் குத் தெரியாமல் சீல் வைத்ததைக் கண்டித்த மந்திரி, சீல்களை அகற்றும்படி சொல்லியும் வாரிய நிர்வாகம் அகற்றவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் 18-ந் தேதி மந்திரியும் எம்.எல்.ஏவும் ஆதரவாக இருக்கும் தைரியத்தில் கடைக்காரர்களே சீலை உடைத்து கடையைத் திறந்து கொண்டார்கள். 

தேனி மாவட்டத்தில் நடந்த அ.திமு.க. பாசறைக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், 40 தொகுதி களிலும் ஜெயித்து ஜெ.வை பிரதமராக்க வேண்டும் என்று பேசி முடிக்க, நிறைவாகப் பேசிய பாசறைச் செயலாளரான அமைச்சர் வைகைச்செல்வன், தமிழகத் தின் தலைநகர் சென்னை என் றால் அ.தி.மு.க.வின் தலைநகர் தேனி என்றபடி ஓ.பி.எஸ்.ஸைப் பார்த்தார். நல்லதுக்கா கெட்ட துக்கா எனப் புரியாத மன நிலையில் இருந்தார் ஓ.பி.எஸ்.

ad

ad