புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2013

டூமினியின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்தது.
ஜீன்பால் டூமினி அரைசதம் கடந்து 51 ஓட்டங்களும், டிவில்லியர்ஸ் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சசித்ரா சேனநாயக 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 116 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக சங்கக்காரா அரைசதம் கடந்து 59 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் தென் ஆப்ரிக்க சார்பில் டூமினி 3 விக்கெட்டும், மோர்னி மோர்கல், வேய்ன் பர்னல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்றைய போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் டூமினி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad