புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

இதெல்லாம் ஒரு காரணமா?  : விஜயகாந்துக்கு கோர்ட் எச்சரிக்கை
2012 அக்டோபர் 26ம் தேதியன்று கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தியில் ‘மக்கள் பணத்தை பாழாக்கிய ஜெயலலிதாவின் விளம்பர வெறி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி முதல்வரின்
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, விஜயகாந்த் மீது முதல்வர் சார்பில் அரசு வக்கீல் எம்.எஸ் ஜெகன், செஷன்ஸ் கோர்ட்டில் கடந்த டிசம்பர் 13ல் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது. ஜூலை வரை 11 வாய்தாக்கள் நடைபெற்றன. இதில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை. ஜூலை 1ம் தேதி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இது தொடர்பாக விஜயகாந்த்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் விளக்கம் கொடுத்ததால் பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக்கலிங்கம் முன் இன்று காலை விசார ணைக்கு வந்தது. விசாரணையில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை. அவர் சார்பில் அவரது வக்கீல் பாலாஜி ஆஜர் ஆகி, விஜயகாந்த் ஆஜர் ஆவதிலிருந்து விலக்கு அளிக்க கோரினார். இதற்கு அரசு வக்கீல் ஜெகன், 'ஏற்கனவே பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, அடுத்த வாய்தாவுக்கு ஆஜர் ஆக உத்தரவிடப்பட்டது.
ஆனாலும் அவர் ஆஜர் ஆகவில்லை. நீதிமன்றத்தின் மீதான மரியாதையை குறைக்கும் வகையில் அவரது நடவடிக்கை உள்ளது' என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, விஜயகாந்த் வக்கீலை பார்த்து, 'என்ன காரணத்துக்காக விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வக்கீல் பாலாஜி, 'கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கலந்து கொள்வதால் ஆஜர் ஆகவில்லை' என்றார்.
இதைக்கேட்ட நீதிபதி, 'இதெல்லாம் ஒரு காரணமா? அடுத்த வாய்தாவில் ஆஜர் ஆகவில்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்றார். வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ad

ad