புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013

gimpaka_jvpnews2
கம்பஹா நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று (21) பிற்பகல் பணக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி ஊழியர்களை சிறைப்படுத்தி அங்கிருந்து ஒருகோடியே 68 லட்சத்து 80 ஆயிரத்து 600 ரூபா (168,80,600,00)
பெறுமதியான தங்க ஆபரணங்களையும் 11 லட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபா (1,179,800.00) பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா ஊடாக கொள்ளையர்களின் புகைப்படம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலே காணப்படும் புகைப்படங்களில் உள்ள சந்தேகநபர்கள் குறித்து தகவல் தெரிந்தோர் கீழ் காணும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சரியான தகவல் வழங்குவோருக்கு பொலிஸ் திணைக்களம் 10 லட்சம் ரூபா பணப்பரிசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண வடக்கு – 0777 923922, 0112911197
பொலிஸ் அதிகாரி – கம்பஹா – 077 4784646, 033 2222228
பொறுப்பாளர்/ குற்றத்தடுப்புப் பிரிவு மேல் மாகாண வடக்கு – 077 3917092, 011 2947780gimpaka_jvpnews1 gimpaka_jvpnews3gimpaka_jvpnews4


ad

ad