புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

எகிப்தில் மோர்சி ஆதரவாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு  எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம்  அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து  அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர்  இதுவரை காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.  இதனால், கொதிப்படைந்த ஆவரது  ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்த கோரி தலைநகர் கெய்ரோவில் ரபா-அல்-அடாவியா என்ற முகாம் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
அவர்களை கலைந்து செல்லும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் மோர்சியின்
ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் இன்று காலை களத்தில் இறங்கினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகளை
வீசிய போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அது கலவரமாக மாறியது.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இரு போலீசாரும் கொல்லப்பட்டதாக
கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டோர் மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலரின் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும் போராட்டக்காரர்களின் மற்ற முகாம்களையும் விரைவில் கலைப்போம் என்று போலீசார் கூறியுள்ளனர். இது போராட்டக்காரர்களை கலைப்பதற்கான முயற்சியல்ல. ராணுவ ஆட்சிக்கவிழ்புக்கு எதிராக போராடுபவர்களின் உரிமையை நசுக்குவதாக உள்ளது என்று முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் எகிப்தில் மோர்சியின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் இடையே நடந்த மோதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ad

ad