புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013

திருமாவளவன் மீது கோவை பெண் பகீர் புகார்! போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு பேட்டி!
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி மகளும், காந்திபுரம் பகுதியில் உள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளர்களில் ஒருவருமானவர் கவிதா (35). சனிக்கிழமை
காலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற கவிதா, புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நான் எஸ்.டி.கே.எஸ். என்ற நர்சரி பள்ளியை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். எனக்கு லதா மகேஷ்வரி என்பவர் உதவியாளராக இருக்கிறார். அவருடைய கணவர் மூலமாக கார்த்தி என்பவர் பழக்கமானார். கார்த்தி மூலம் சிலர் நண்பர்களானார்கள். 
என்னுடைய நர்சரி பள்ளியை லீசுக்கு கேட்டார்கள். பின்னர் திடீரென்று பவர் எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. எனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. ஆகையால் ஈஷா என்ற இரண்டு வயது குழந்தையை நான் தத்தெடுத்திருந்தேன். பவர் எழுதி கொடுக்கவில்லை என்றால், அந்த குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். மிரட்டி என்னிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார்கள். 
இவர்கள் எல்லோருமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பின்பலம் கொண்டவர்கள். ஏனென்றால் திருமாவளவனுக்கும் எனக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பார்த்தபோது அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் வேறமாதிரி பழக ஆரம்பித்துவிட்டோம். அதனால் திருமாவளவன் சொல்லியதற்காக எனது கணவரான செந்தில்குமாரை கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டேன். 
இப்போது, என்னுடைய சொத்துக்கள் கைவிட்டுபோனதால் திருமாவளவன் என்னை சந்திக்க மறுக்கிறார். ஈஷாவின் பிறந்தநாள் அன்று குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் என்று சிலவற்றை காண்பித்தார். என்னை யார் என்று சொல்லுவதற்கு இந்த படங்களே சாட்சி. உன்னை யார் என்று தெரியவில்லை என்று சொல்கிறார். என் மீது ஆசையில்லாமல் என் சொத்தின் மீதுதான் அவர் ஆசைப்பட்டுள்ளார். 
இப்போதும்கூட திருமாவளவனின் உதவியாளரான முத்துப்பாண்டி, ஏன் புகார் கொடுக்க சென்றீர்கள். பேசி தீர்த்தித்துக்கொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் என்னை கொலை செய்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு கூறினார். 
கோவை பெண்ணின் புகார் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ad

ad