புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2013


வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற
 46 இலங்கை தமிழர்கள் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கணியில் இருந்து இன்று அதிகாலை படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற 46 இலங்கை அகதிகளை போலீசார் கைது செய்தனர்.



இதைதொடர்ந்து நாகப்பட்டினம் புத்தூர் ஆரோக்கிய அன்னை திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களில் 15 பெண்களும், 4 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.  அவர்கள் ஏஜெண்டுகள் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்ட போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் திருச்சி, சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு அகதிகள் முகாமினை சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு பட்டப்படிப்பு படித்தால் கூட அகதிகள் என்பதால் வேலை வாய்ப்புகள் இன்றி கூலி வேலைகளுக்கு செல்ல வேண்டி இருப்பதாலும் ஆஸ்திரேலியா சென்றால் அங்கு உடனடியாக குடியுரிமை கிடைக்கும் என்பதாலும் படகில் தப்பி செல்வதற்கு முயற்சி செய்தாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவித் துள்ளனர்.
மேலும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்

ad

ad