புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

உயர்கல்வி கட்டணத்தை ஏற்குமாறு தலைமைச் செயலகம் முற்றுகை: மாணவர்கள் போலீஸ் தள்ளுமுள்ளு
அரசாணை 92ஐ செயல்படுத்தக்கோரி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தலைமைச் செயலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 


உயர்கல்வி பயிலும் எஸ்.டி., எஸ்.சி., மாணவர்களின் கல்வி தொகையை அரசே செலுத்தும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்ததை சுட்டிக்காட்டி, அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் கழகத்தினர் வெள்ளிக்கிழமை காலை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தலைமைக் கழகத்தை நோக்கி சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பை மீறி மாணவர்கள் தலைமைச் செயலகம் உள்ளே நுழைய முயன்றதால், அவர்களை இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
கடந்த 3 ஆண்டுகளாக சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்த எஸ்.டி., எஸ்.சி., மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், எஸ்.டி., எஸ்.சி., மாணவர்களின் உயர்கல்விக்கு 2013ம் ஆண்டு மே மாதம் அரசு ஒதுக்கீடு செய்த 482 கோடி ரூபாய் உரிய முறையில் செலவிடப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

ad

ad