புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2013

தலைவா பட டைட்டிலில்
செய்யப்பட்ட மாற்றம்!

 

விஜய் நடித்த தலைவா படம் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட இருந்தது. சென்னையில் உள்ள தியேட்டர் களுக்கு, மர்ம மனிதர்கள் குண்டு மிரட்டல் விடுத்ததால், படம் வெளியாகவில்லை. தமிழகம் தவிர, ஆந்திரா, கார்நாடகா, கேரளா, மும்பை
மற்றும் வெளிநாடுகளில், திட்டமிட்டபடி, 9ம் தேதி படம் வெளியானது.
படம் திரைக்கு வர தாமதம் ஆகிக்கொண்டிருந்ததால்  தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ்ஜெயினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.

தொடர்ந்து, வினியோகஸ்தர் - தியேட்டர் உரிமையாளர்கள் இடையே, பட வெளியீடு குறித்து, இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, வரும், 20ம் தேதி தமிழகம் முழுவதும், 400 தியேட்டர்களில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தியேட்டர் களில் நேற்று முதல் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த, தலைவா' படத்திற்கான விளம்பரத்தில், "தலைவா' பெயருக்கு கீழ், "டைம் டூ லீட்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

"இது அரசியலுக்கு வர சரியான தருணம்' என்பதை போல, ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இப்படம் பிரச்னையில் சிக்கி, 20ம் தேதி வெளியிடப்பட உள்ளதால், படத்தில், "அரசியல் தொடர்பான காட்சிகள் ஏதும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பட விளம்பரத்தினாலும், ஏதும் பிரச்னை தலை தூக்கிவிடக்கூடாது என்ற நோக்கில், "டைம் டூ லீட்' என்ற வாசகம், பட விளம்பரத்தில் இருந்து நீக்கப்பட்டு, நேற்று வெளியிட ப்பட்டது.

ad

ad