புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

ஜெகன் மோகன் ரெட்டி உண்ணாவிரதம் : சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள மறுப்பு
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.



ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றன.


மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி, சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் கடந்த 25–ந்தேதி சிறையில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.50 மணியளவில் அவர் குண்டு துளைக்காத வாகனம் மூலம் பலத்த பாதுகாப்புடன் உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் குளுகோஸ் அளவு குறைந்து வருவதாகவும், ஆனால் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும் அறிவித்தனர். எனவே குளுக்கோஸ் அளவை அதிகரிக்க எளிய உணவு வகைகளையாவது உட்கொள்ள வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆஸ்பத்திரியிலும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முயன்றனர். ஆனால் சிகிச்சை பெற ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டார்.


ஊசி மூலம் திரவ உணவு செலுத்துவதற்கும் அவர் மறுத்து விட்டார். இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது தாய் விஜயம்மா மற்றும் தொண்டர்கள் சிறையிலும், ஆஸ்பத்திரியிலும் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad