புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2013



பூட்டிய வீட்டில் பள்ளி சிறுவனுடன் பெண் மர்மமான முறையில் மரணம்; கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சாந்தி நகர், நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு முதல் “துர்நாற்றம்” வீசியது. 


இதுகுறித்து, பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., கோபி, டவுன் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீஸார், பூட்டிய வீட்டை உடைத்து, திறந்து பார்த்தனர்.
வீட்டின் உள்ளே எட்டு வயது சிறுவனுடன், 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் இறந்து கிடந்தார். இருவரும் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால், உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. அந்த வீட்டின் உள்ளே பள்ளி பாடப்புத்தகங்கள் சிதறி கிடந்தது. அந்த நோட்டு, புத்தகத்தில், "சக்திவேல், ஓசூர் அரசு துவக்கப்பள்ளி, மூன்றாம் வகுப்பு' என, எழுதப்பட்டிருந்தது.
அதனால், இறந்த சிறுவன், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பது தெரிந்தது. இறந்த கிடந்த பெண், சிறுவனின் தாயா அல்லது பாட்டியா என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
இருவரும் விஷம் குடித்து இறந்தார்களா அல்லது யாராவது அவர்களை அடித்து கொலை செய்து வீட்டை பூட்டி சென்றார்களா என்ற சதேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
போலீஸ் முதல் கட்ட விசாரணையில், அந்த வீடு, அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. குமாரிடம் விசாரித்த போது, ஒரு மாதத்துக்கு முன் தான் பாட்டியும், பேரனும் வாடகைக்கு குடி வந்ததாகவும், அவர்கள் யார் என்று தெரியாது என, குமார் போலீஸில் தெரிவித்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ad

ad