புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2013

வெலிவேரிய சம்பவம் : ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணியினரின் சார்பில்  தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.



இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முனனணியின் தலைவர் மனோ கணசேன், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரபாகு கருணாரட்ன, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி, ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களான சஜித் பிரேமதாச, திஸ்ஸ அத்தநாயக்க, கிரான் விக்கிரமரட்ன, ஹரின் பெர்னாண்டோ, மங்கள சமரவீர உட்பட எதிர்க்கட்சிகளின் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சுதந்திரத்துக்கான அரங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், ஊடக அமைப்புக்களின் ஒன்றியம் உட்பட ஏனைய பல அமைப்புக்களின் சார்பிலும் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். 'வடக்கிலும் சுட்டுக் கொன்றனர் தெற்கிலும் சுடுகின்றனர்". 'இந்த அரசாங்கத்துக்கு இடமளிக்கக் கூடாது" , 'அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவோம்" , 'அரச தலைவர்களே கொலைகாரர்கள்" 'தண்ணீர் கேட்ட மக்களை சுட்டுக் கொல்வதா ஜனநாயகம்" என்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வெலிவேரிய பகுதி மக்களும் கலந்துகொண்டனர். வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவரது புகைப்படங்களும் ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே வைக்கப்பட்டு பலியானவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

ad

ad