புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2013

வெலிவேரிய சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதற்காக மன்னிப்புக்கோரியுள்ள அரசு யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்காகவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சம் தமிழ் மக்களுக்காகவோ ஏன் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை
யென  கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ் மக்கள்
கொல்லப்படவேண்டியவர்கள் என்ற நிலைப்பாட்டில் அரசு இருப்பதனாலேயே தமிழ் மக்களின் உயிரிழப்புகள்தொடர்பில் இதுவரை மன்னிப்புக் கோரவில்லையென்றும் கூறினார்.

அத்துடன்  கொல்லப்பட்டவர்களுக்கு  நீதி, நியாயம் கிடைக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு  உலகெங்கும் சென்று அழுத்தம் கொடுக்குமெனவும் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், சிங்கள மக்களுக்காக குரல் கொடுக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/ofatciuzg1627830de24287a13729rdfgc6d8f07b37c716ad51623a7ljvtt#sthash.nXFZDm1J.dpuf

ad

ad