புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!

யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையினில் காரைநகரினில் தனது பிரச்சார நடவடிக்கைகளினை பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர் அச்சுறுத்தி குழப்பி வருவதாக தெரிவித்து யாழ்.ஊடக அமையத்தினில் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்திய பின்னர் திரும்;பிக்கொண்டிருந்த வேளை அவர் சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனினது தந்தையாரான இராமநாதன்  மற்றும் அவரது எடுபிடிகளினால் தாக்கப்பட்டிருந்தார்.

தாக்குதல் தொடர்பினில் யாழ்.பொலிஸ் நிலையத்தினில் தான் முறைப்பாடொன்றை செய்திருந்த போதும் தாக்குதலாளிகள் விபரங்களை தெரிவிக்காமையினால் எவரையும் கைது செய்திருக்கவில்லையென பொலிஸ் தரப்பினில் தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும் தாக்குதலாளிகளிற்கு தலைமை தாங்கி வந்திருந்த இராமநாதன் மற்றும் 11பேரது பெயர் விபரங்களை தான் குறிப்பிட்டிருந்ததாக தம்பிராசா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விபரங்களை அறியச்சென்றிருந்த போதே தனது தாயாரை மிக கேவலமாக நிந்தித்து  பேசிய யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவ்வகையினில் தாக்க முற்பட்டதையடுத்தே தப்பித்து ஓடி வெளியே வந்து அகிம்சை வழியினில் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாகவும் தெரிவித்தார். தனது போராட்டத்தின் பலாபலனாக நேரினில் அங்கு வருகை தந்து பேசிய யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் குறித்த 12 பேரிற்கு எதிராகவும் நீதிமன்றினில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் போராட்டத்தை கைவிடக்கோரியதாகவும் அதனையடுத்து தான் போராட்டத்தை கைவிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதே வேளை தனது வர்த்தக நிலையத்தினுள் அத்து மீறிப்பிரவேசித்தமையினாலேயே குழப்பம்  நிகழந்ததாக இராமநாதன் மற்றொரு புகாரை பொலிஸினில் செய்துள்ளாரேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் சம்பவ இடத்தினில் இராமநாதனிற்கு சொந்தமான வர்த்தக நிலையம் இருந்தமை பற்றி தமக்கு தெரியாதென தெரிவித்தார். தான் அவ்வாறு இவ்வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி பிரவசித்திருந்தால் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமரா மூலம் சம்பவத்தை கண்டறிய முடியுமென குறிப்பிட்டதுடன் எனினும் தாக்குதலை நடத்திவிட்டு அங்கேயே இராமநாதன் பதுங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.

தன்மீதான கொலை முயற்சி மற்றும் தனது அகிம்சைப்போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஏனைய தரப்புக்கள் ஆதரவளிக்காமைக்கான காரணம் தனக்கு தெரிந்திருக்கவில்லையென தெரிவித்ததுடன் எனினும் தான் தொடர்பு கொண்ட போது பல நாடாளுமன்ற அங்கத்தவர்கள் தனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லையெனவும் கவலை தெரிவித்தா

ad

ad