புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2013



         "சூடான ஒரு மேட்டர் சொல்லவா?' என நம் லைனுக்கு வந்தார் நமது நியூஸ் சோர்ஸ்.

சொல்லுங்களேன்.

"தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் குயிலே...'


"அட... பாட்டாவே பாடீட்டிங்களா? மேல பாடுங்க... என்னா நாடகம்?'

"சுந்தரி நீயும், மந்திரி நானும் சேர்ந்திருந்தால் சுகபோகம்'னு கவர்ச்சி நாடகம் ரியல்ல நடந்திருக்கு'. 

சுந்தரி யாரு? 

"இரும்புக் கம்பியில ஆரம்பிச்சு ஈமு கோழி வரை கொங்கு நாட்டு பிசினஸ் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து கொங்கு மண்டல புள்ளிகளின் அபிமானம் பெற்றவர் அந்த பிரமாண்ட கவர்ச்சி நடிகை!'.

மந்திரி யாரு?

"மாந்தோப்பு, புளியந்தோப்பு, தென்னந்தோப்பு... இப்படி பல தோப்புகள ஊர்ல பாத்திருப்ப... "பேர்'ல பாத்திருக்கியா? பாத்துக்க... பாத்துக்க... நல்லா பாத்துக்க!'.

மந்திரியும், சுந்தரியும் லிங்க் ஆனது எங்க? எப்படி?

"நீ ஸ்டுடியோவை சுத்துற "கொக்கரக்கோ' கோழி, ஏரியா ரிப்போர்ட்டர்கிட்ட லிங்க் குடு. அவருக்குத் தான் ஈஸியா புரியும்!'.

குடுத்தாச்சு... குடுத்தாச்சு.

"ஈமு பிசினஸின் முன்னோடியாக இருந்த இரண்டெழுத்து நிறுவன விளம்பரங்களில் நடித்ததன் மூலம் ஈமு அதிபரிடம் நெருங்கிய பரிச்சயம் உண் டானது நடிகைக்கு. அந்த ஈமு அதிபர் தன் நண்பரான பெரிய்ய பனியன் கம்பெனி அதிபருக்கு நடிகையை அறிமுகப்படுத்தி வச்சார். அந்த பனியன் பார்ட்டி, மந்திரிக்கு நிழல் மாதிரி!'.



பனியன் பார்ட்டி யாரு?

"பவர்' என்பதற்கான தமிழ்ச் சொல்லையும், முருகக் கடவுளின் கையில் இருக்கும் ஆயுதத்தையும் பெயராகக் கொண்டவர் அந்த பனியன் பார்ட்டி. மாவட்டச் செயலாளர் ஆனது முதல் மந்திரி ஆவது வரைக்கும் மந்திரிக்காக பலப்பல கோடிகளை செலவு செய்தவர் இந்த பவர்தான். உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். கோவை விமான நிலையம் ஏரியாவில் காளப்பட்டி ரோட்டில் ஒரு கெஸ்ட்-ஹவுஸ்.

பெருந்துறை-விஜயமங்கலம் அருகே ஒரு கெஸ்ட் ஹவுஸ், அரச்சலூர் சென்னிமலை ரோட்டில் ஒரு கிராமத்தில் பண்ணை வீடு, பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் என பல கெஸ்ட் ஹவுஸ் வைத்திருக்கிறார் பவர்.

இந்த பவர்தான் விளம்பரப் படத்தில் நடிக்க வந்த நடிகையை மந்திரிக்கு அறிமுகம் பண்ணி வைத்தார். கடந்த ஐந்து மாதங்களா "நீ வருவாய்' "நான் வருவேன்' பலமுறை மந்திரி சுந்தரி சந்தி (த்தி)ப்பு நடந்து வருது!'.

எப்படி ப்ளான் போடுறாங்க?

"அந்த நடிகை விமானம் மூலம் கோவை வந்தால் பவரின் கார் மூலம் அவரை பிக்-அப் பண்ணிக் கொண்டு ஏதாவது ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பார்கள். சில சமயம் சென்னையிலிருந்து கார் மூலமாகவும் வருவார் நடிகை.

சமீபத்தில் மூணு நாள் மந்திரியும் சுந்தரியும் விஜயமங்கலம் ஏரியா கெஸ்ட் ஹவுஸில் டேரா போட்டிருக்காங்க. லேடீஸ் விஷயத்தில் வீக்கானவரா மந்திரி தன்னை காட்டிக்கிட்டதில்லை. லேடீஸ் விஷயத்தில் படு வீக்கான ஒரு லோக்கல் போலீஸ் ஆபீஸர், மந்திரியின் நண்பர். சமீபத்தில் இந்த ஆபீஸரை தமிழ்நாட்டின் கடைக் கோடி பகுதிக்கு மாற்றியபோது... மந்திரி மேலிடத்தில் பேசி தன் ஏரியாவிலேயே வைத்துக் கொண்டார்.

அந்த நடிகை சென்னையிலிருந்து இங்கு வந்து, தங்கி திரும்பிப் போகிற வரை நடிகையை கண் கலங்காம பாதுகாப்பது இந்த ஆபீஸர்தான். அரசியல்ல கலக்கப் போறதா சமீபகாலமாக அந்த நடிகையைப் பத்தி பேச்சு அடி படுது. நடிகையோ அரசியல்வாதியோட கலந்துக் கிட்டிருக்கார்!'.

வாய்ப்புக் கிடைக்காதவரைக்கும் தான் எல்லோரும் யோக்யம்! சொப்பன சுந்தரியை நேர்ல தரிசிக்கிறது மந்திரியோட பெர் ஸனல். அதை எதுக்கு பெரிசு படுத்தணும்? மந்திரிய அந்த நடிகை "மச்சான்ஸ்'னு கூப்பிட்டா ஒங்களுக்கு ஏன் எரியுது?

"பொலிடிகல் ரிப்போர்ட்டர்கிட்ட லைனைக் குடுங்க. ஏன் எரியுது?னு அப்பப் புரியும்.'

குடுத்தாச்சு... குடுத்தாச்சு..

"இந்த மந்திரியின் துறை மற்ற துறைகளை விட முக்கியமானது. ஏற்கனவே மூன்று முறை இந்தத் துறையின் மந்திரிகள் நீக்கப்பட்டு, நாலாவதாக இவர் மந்திரியானார். அதேபோல் துறைச் செயலாளரும், நிர்வாக ஆணையரும் கூட மூன்றுமுறை மாற்றப்பட்டு நான்காவதாக இப்போது இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மக்களின் அன் றாட வாழ்வோடு சம்பந்தப் பட்ட துறை இது. 

அரசு எந்திரத்தின் 64 துறைகளை ஒருங்கிணைத்து அரசு எந்திரத்தின் மூளை யாக செயல்படும் துறை, ஆனால் முடங்கிப் போயுள்ளது. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜனத்தொகைக்கேற்ப 4 லட்சம் மக்கள் உள்ள இடத்தில் வட்ட அலுவலகம் என 25 அலுவலகங்கள் அமைக்கப்படும்னு முதல்வர் அறிவித்தார்.

துறையின் செயலாளரும், நிர்வாக ஆணையரும் இதற்கான ஆய்வறிக்கையை தயாரா வச்சிருக்காங்க. மந்திரியுடன் விவாதித்து அந்த அறிக்கையை தலைமைச் செயலாளருக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்பணும். ஆனா... மந்திரி அதை இன்னமும் கண்டுக்காம இருக்காரு. இப்படி பல முக்கிய வேலைகளை விட்டு விட்டு தனக்கான வருவாயில் மட்டும் கவனமா இருக்காருனு துறை ஊழியர்கள் புலம்புறாங்க.

மக்களை அரசாங்கம் நேரில் சந்தித்து உதவணும் என்ற நோக்கில் "மம்மி ஸ்கீம்' கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங் களில் இதுவும் சரியான முறையில் அனைத்து மக்களையும் எட்டவில்லை. ரேஷன் விநியோக முறையில் புதிய மாற்றங்களையும், விநியோகத்தை கண்காணிக்கும் குழுவில் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தணும்... என்பதை உணவுத்துறை அமைச்சகம் இந்தத் துறைக்கு வலியுறுத்தி இரண்டு வருஷமாகுது.'

பக்கா டீடெய்லா இருக்கே.

"சரி... சரி... சினிமா ரிப்போர்ட்டர், ஏரியா ரிப்போர்ட்டர், பொலிடிகல் ரிப்போர்ட்டர்... எல்லாரும் ஒண்ணா லைனுக்கு வாங்க.'

வந்தாச்சு... வந்தாச்சு...

"ஃபைல்களை பார்க்க நேரமில்லாம நடிகையிடம் ஸ்மைல் பண்ணிக்கிட்டிருக்கிறார் மந்திரி. இத எப்படி பெர்ஸனல் மேட்டர்னு ஒதுக்க முடியும்? துறை... குறைபட்டுக் கிடக்க... துறை மந்திரி, மைனர் துரை மாதிரி இருக்கலாமா?'.

கொஸ்டீன் ரொம்ப குட் கொஸ்டீன். ஏற்கனவே லேடீஸ் கசமுசாவுல ஒரு மந்திரி பதவியிழந்தார். "ஆப்பு'னு தெரிஞ்சும் வலியப் போய் மாட்டிக்கிறாங்களே? ஏன்னு தெரியல.

"அதற்கான பதிலை நான் சொல்லட்டா. "ஆப்பு'தான் என்றாலும் "கிளுகிளுப்பு' இருக்கே. ஓ.கே... லைனை "கட்' பண்ணிக்கிறேன். நமக்கெதுக்கு இந்த பொல்லாப்பு.'

ad

ad