புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2013

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல:சுஷ்மா சுவராஜ்


நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், காங்கிரசும், மத்திய அரசுமே காரணம் என்றும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அவர் இது குறித்து கூறுகையில், "நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர் வெறும் 88 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. 10 நாட்களில் 88 சதவிகித நேரம் வீணாகி உள்ளது. இதற்கு கரணம் பாஜக அல்ல. கூச்சல், குழப்பம், அமளி எல்லாமே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் போக்கால் உருவானதுதான். மக்களவையில் தனி தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுவது எதனால்?
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் தொலைந்து போனது என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்க பிரதமர் மறுப்பது எதனால்? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நாடாளு மன்றத்தை முடக்கி வருவது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான்." என்று சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

ad

ad