புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2013


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகர் பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடித்து விட்டு திரும்பும் போது அவரது வாகனத்தை புலனாய்வாளர்கள் இருவர் பின்தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக தம்பிராசா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் புலனாய்வாளர்கள் தன்னை அச்சுறுத்துவதாக தெரிவித்ததையடுத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதல் நடாத்தியவர் ஒரு கடையினுள்ளேயே மறைந்து இருந்துள்ளார் எனினும்,  பொலிஸார் அவரை கைது செய்யவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தம்பிராசா அவர்களின் வாகனத்தை கண்டர் வாகனத்தில் இழுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.
யாழில் முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் பதிவு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் அடாவடி மீண்டும் குடாநாட்டில் அரங்கேற்றப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.குடாநாட்டில் முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று மாலை 5.15 மணியளவில் யாழ்.நகரப் பகுதியில் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை வேட்பாளர் எஸ்.தம்பிராசா, மற்றும் காரைநகர் பிரதேச சபையின் தலைவர் ஆனைமுகன் ஆகியோர் பயணித்த வாகனங்களை,
அங்கஜனின் ஆதரவாளர்கள் மற்றும் தந்தையார் வாழிமறித்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியுள்ளதுடன், வேட்பாளரை வாகனத்தின் பாரம் உயர்த்தியினால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார்.
மேலும் பெரிய தமிழ்த் தேசியப் பற்றாளர்களா நீங்கள்? என்ற கேள்வி எழுப்பிக் கொண்டே கைத்துப்பாக்கியை எடுத்து வேட்பாளரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் முயற்சித்துள்ளார்.
அதற்குள் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடிவிட அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் துப்பாக்கிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கஜனின் தந்தை அருகிலுள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் சென்று ஒழிந்து கொண்டார்.
இதனையடுத்து கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா குறித்த துப்பாக்கிதாரியை எதற்காக கைது செய்யவில்லை என பொலிஸாருடன் வாதாடியதுடன், அங்கஜனின் தந்தை ஒழிந்திருந்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டார்.
அப்போதும் பொலிஸார் அங்கஜனின் தந்தையாரை கைது செய்யாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் வர்த்தக நிலையத்தில் பின் கதவால் தப்பித்து ஓடிவிட்டார்.
இதனையடுத்து தம்பிராசாவை பொலிஸார் முறைப்பாடு பெறுவதற்கான அழைத்துச் சென்றுள்ளனர். இதேவேளை அங்கஜனின் தந்தைக்கு பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் பாதுகாப்பு வழங்கினர்.
மேலும் இதேபோன்றதொரு சம்பவம் கடந்த யாழ்.மாநகரசபை தேர்தலின்போதும் நடைபெற்றிருந்தது, அங்கஜனின் தந்தை யாழ்.மாநகரசபை முதல்வரின் நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து சுட முயன்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலாவது தேர்தல் வன்முறை இன்று மாலை 6மணிக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ad

ad