புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2013

யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளினில் கரை ஒதுங்கிவரும் சடலங்கள் அவுஸ்திரேலியா நோக்கிய படகு விபத்தினில் மரணித்த தமிழர்களுடையவையாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இன்றைய தினமும் மேலும் மூன்று சடலங்கள் மோசமாக சேதமடைந்த நிலையினில் ஊர்காவற்துறையின் சாட்டி கடற்பரப்பினுள் கரையொதுங்கியுள்ளது.சிறு
குழந்தையொன்றினதும் மற்றும் பெண் ஆண் ஒருவருடையதென இம்மூன்று சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன.அவர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு கவசத்தினில் பிஎல்சிஈ 1989 எனும் அடையாளங்கள் காணப்பட்டன.

ஏற்கனவே தீவக கடற்பரப்பினில் அடுத்தடுத்து இரு ஆணகளது சடலங்கள் மோசமாக சிதைந்த நிலையினில் மீட்கப்பட்டிருந்தது.தற்போது அவை யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையினில் இன்று மீட்கப்பட்ட சடலங்களும் அஙகேயே எடுத்துவந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்மையினில் இந்தோனேசியாவிலிருந்தும் இலங்கையின் சில பகுதிகளினிலுமிருந்தும் கடல்வழியாக அவுஸ்திரேலியா தப்பிச்செல்ல முற்பட்ட அகதிகள் படகுகள் மூழ்கியிருந்தன.இவ்விபத்தினில் மரணமானவர்கள் தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளிவந்திராத நிலையினில் தற்போது கரை ஓதுங்கி வரும் சடலங்கள் அவர்களுடையதாக இருக்கலாமென சந்தேகம் வலுத்துள்ளது

ad

ad