புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி திட்டம் தீட்டுகிறதா?
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளை ஒழுங்குபடுத்தியிருந்த, ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க, கடந்தவார இறுதியில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கனடாவுக்குச் சென்றிருந்தனர்.
இதுகுறித்து, சிறிலங்கா அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள அரச புலனாய்வுப் பிரிவு, இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் நிகழ்வில் பங்கேற்கவே அங்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய,“கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசு ஒழுங்குபடுத்திய நிகழ்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் பங்கேற்றனர் என்பதை புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
ஆனால், சிறிலங்காவில் தமிழீழத்தை அமைக்கும் கனவுடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர்.
நாட்டின் அரசியலமைப்பை மீறியதற்காக அவர்களை கைது செய்யமுடியும்.
அதனை, சட்டத்துறை சார்ந்த அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ad

ad