புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

navi-east3

நவநீதம்பிள்ளையின் திட்டமிடப்படாத திடீர் சந்திப்பு, களப்பயணம் – அரசாங்கம் குழப்பம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சில திடீர் சந்திப்புகளையும், களஆய்வையும் மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்த போது, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ள கொக்கிளாய் முகத்துவாரப் பகுதிக்கு திடீரெனச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால், நவநீதம்பிள்ளை மேற்கொண்டு திடீர் கள ஆய்வுப் பயணமாகும்.
அதேவேளை, கிழக்கு மாகாண நிலவரங்கள் தொடர்பாக ஆராய நேற்று திருகோணமலை சென்றிருந்த போதும், நவநீதம்பிள்ளை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாத – சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலையில் உள்ள முக்கியமான கிறிஸ்தவ மதகுருவான வண.பிதா யோகேஸ்வரனை திடீரெனச் சென்று சந்தித்திருந்தார் நவநீதம்பிள்ளை.
இந்தச் சந்திப்பு முன்னரே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இடம்பெறவில்லை என்பதுடன், இதுகுறித்து அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் அறிந்திருக்கவில்லை.
கொழும்பிலுள்ள ஐ.நா செயலகமே இந்தச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்திருந்தது.
கொழும்பு புறப்படுவதற்கு முன்னதாக, சுமார் ஒரு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முக்கியமான மனிதஉரிமை செயற்பாட்டாளரான வண.பிதா யோகேஸ்வரன், அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின் போது, காணாமற்போனவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் நான்கு அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றையும் நவநீதம்பிள்ளையிடம் வண.பிதா யோகேஸ்வரன் கையளித்துள்ளார்.
அதேவேளை, நேற்று திருகோணமலை சென்ற நவநீதம்பிள்ளை, கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்துப் பேசியிருந்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தனர்.
மேலும், சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களையும் அவர் சந்தித்தார்.
அப்போது தம்மை சம்பூரிலேயே மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இடம்பெயர்ந்துள்ள மக்கள் வலியுறுத்தினர்.navi-east1navi-east-2navi-east-4

ad

ad