புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2013

ஐ.தே.கட்சியை சேர்ந்த 6 பேர் அரசுடன் இணைய உள்ளனர்- உறுப்பினர்களின் கட்சி தாவலால் பீதியடைந்துள்ள ரணில்
அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் எதிர்க்கட்சியை சேர்ந்த 6 பேர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளனர் என பிரதம் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.
கம்பளை வெலிகல்ல பொல்லங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக்கட்சியின் 6 முக்கியஸ்தர்கள் உட்பட மேலும் பலர் எதிர்வரும் நாட்களில் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து, நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். அவர்களில் 35 பேர் தற்போது அரசுடன் இணைந்துள்ளனர்.
தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று உணர ஆரம்பித்துள்ள பலர் , அரசாங்கத்தின் கொள்கைகளை நன்கு புரிந்து கொண்டு அரசுடன் இணைந்து வருகின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுடன் இணைந்துள்ளதால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் சாதாரண உறுப்பினர்களும் அரசுடன் இணைந்து வருகின்றனர் என்றார்.
உறுப்பினர்களின் கட்சி தாவல்: பீதியடைந்துள்ள ரணில்
ஐக்கிய தேசியக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டரா மற்றும் அசோக அபேசிங்க ஆகியோருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணைகளை முற்றாக நிறுத்திவிட்டு, கட்சியின் அங்கத்துவத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் வகித்த பதவிகளை மீண்டும் வழங்குவது தொடர்பில் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
தயாசிறி ஜயசேகரவின் கட்சி தாவலுக்கு பின்னர், அப்படியான கடுமையான தீர்மானங்களை எடுக்க அவர் அச்சம் கொண்டிருப்பது புதிய முடிவின் மூலம் தெரியவந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad